புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜெயிலர் வெற்றியால் காசை வாரி இறைக்கும் கலாநிதி.. கார், சம்பளத்தையும் தாண்டி கோடிக்கணக்கில் செக்

Kalanithi Maran: எதிர்பார்க்காத நேரத்தில் மிகப்பெரிய சந்தோசம் கிடைத்துவிட்டால் தல கால் புரியாமல் ஒவ்வொருவரும் ஆடுவது இயல்புதான். அந்த வகையில் கலாநிதி ஜெயிலர் படத்தின் வெற்றியால் பணத்தை தண்ணியாய் வாரி இறைத்து கொண்டு வருகிறார். அதாவது ஜெயிலர் வெற்றிக்கு பிறகு கிடைத்த வசூல் தொகையிலிருந்து விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கினார்.

அப்படி வழங்கும்போது அதில் ஒரு செக்கும் கொடுக்கப்பட்டது. அந்த செக்கில் எவ்வளவு தொகை என்று இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பரிசுத்தொகையை வாரி வழங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி 30க்கு கோடி.

Also read: எகிறிப்போன லால் சலாம் பட்ஜெட்.. மகள் படம் என்று பாராமல் சம்பளத்தில் இலாப கணக்கு தீட்டிய ரஜினி

மேலும் இந்த படத்தை தாறுமாறாக வெற்றியை கொடுத்தது நெல்சன். அதனால் இவருக்கு 5 கோடி மற்றும் அனிருத்துக்கு 2 கோடி என கொடுத்து இருக்கிறார். இதெல்லாம் இவர்கள் வாங்கின சம்பளம் போக பரிசாக கொடுக்கப்பட்ட தொகை. அத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

அதனால் ரஜினிக்கு பேசப்பட்ட 100 கோடியில் இருந்து 20 கோடி குறைக்கப்பட்டு 80 கோடி தான் சம்பளமாக கலாநிதி கொடுத்து இருக்கிறார். அப்படி இவருக்கு குறைத்துக் கொடுத்தாலும் அதை எந்தவித கேள்வியும் கேட்காமல் ரஜினி அமைதியாக வாங்கிக் கொண்டார். இதுவே கலாநிதிக்கு மிகப்பெரிய நெருடலாக அமைந்திருக்கிறது.

Also read: ஊருக்கு தான் துறவி வேஷம் போடும் ரஜினி.. கலாநிதி மாறனால் அல்லோல்படும் லைக்கா

அதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக ஜெயிலர் படத்தில் கிடைத்த வெற்றிக்கு 10 கோடி, ஏற்கனவே குறைக்கப்பட்டது 20 கோடி என மொத்தமாக 30 கோடி பரிசு தொகையை கொடுத்திருக்கிறார். அதாவது ஒருவருடைய மனம் குளிர்ந்து விட்டால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக கலாநிதி நடவடிக்கை இருக்கிறது.

எது எப்படியோ கலாநிதி மூலம் நெல்சனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துவிட்டது. ஜெயிலர் படத்தால் சம்பளம், கார், பரிசுத்தொகை என சந்தோஷப்பட்டு வருகிறார். அத்துடன் கலாநிதி, நெல்சன், ரஜினி இவர்கள் மூவர் கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து கலாநிதி மாறன் நெல்சனுக்கு அடுத்தடுத்த வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

Trending News