திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே நடிகருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த ஜெயிலரின் பொண்டாட்டி.. அடம்பிடித்து ரஜினியிடம் வாங்கிய வாய்ப்பு

நடிக்க வந்துவிட்டாலே நடிகைகள் சிலர் தங்களுக்கென இருக்கும் சில விதிமுறைகளை மீறி பட வாய்ப்புக்காக எப்படி பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க துணிந்து விடுவார்கள். அதுவும் மார்க்கெட்டில்லாமல் போனால் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நடிகைகள் கூட கண் கூசும் அளவுக்கு கவர்ச்சியில் பின்னி பெடலெடுப்பார்கள். அந்த வகையில் சில நடிகைகள் ஒரே நடிகர்களுடன் ஜோடியாகவும், தங்கையாகவும் நடித்த கதையெல்லாம் உண்டு.

மேலும் சில நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகளும், அதே நடிகர்களுடன் வளர்ந்தவுடன் ஜோடிப் போட்டு நடிக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் ஜோடிப் போட்டு நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரே நடிகருக்கு, மகளாகவும், மனைவியாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார்.

Also Read: 24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், தமன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் படம் மெகாஹிட்டாகி வருகிறது. இதனிடையே ரஜினியின் மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து அசத்தியிருப்பார்.

இப்படத்தை தொடர்ந்து 24 ஆண்டுகள் கழித்து சூப்பர்ஸ்டாருடன் ஜோடியாக நடித்தே தீர வேண்டும் என நெல்சனிடம் அடம்பிடித்து எப்படியோ ஜெயிலர் பட வாய்ப்பை பெற்றார். இதனிடையே இவர் இதற்கு முன்பு வரை பாகுபலி ராஜமாதா என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெயிலரின் பொண்டாட்டி என ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு இந்த கதாபாத்திரம் அவரை உச்சத்தில் கொண்டு சேர்ந்துள்ளது.

Also Read: ஐட்டம் டான்ஸராக ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சி ஆட்டம் போட்ட 6 பாடல்கள்.. கண்ணுக்குள்ளே நிற்கும் ஆட்டமா தேரோட்டமா

இதனிடையே இவர் ஒரே நடிகரை, அப்பா, அண்ணா, கணவன் என கூப்பிட்டு அவருடன் சில படங்களில் நடித்த விஷயம் தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் நாசர். இவர் முதலில் படையப்பா படத்தில் நீலாம்பரியாக வரும் ரம்யா கிருஷ்ணனின் அண்ணனாக நடித்திருப்பார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியின் ஊனமுற்ற, வில்லத்தனமான கணவராக நாசர் நடித்திருப்பார். மேலும் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் அப்பாவாக நடித்திருப்பார். இப்படி இவர்கள் இருவரும் வேறு, வேறு உறவு முறைகளில் வெல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: வில்லனாய், ரஜினியை குடைச்சல் கொடுத்த நடிகர்.. பொறாமை பட வைத்த நாசர்

Trending News