வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கூடா நட்பு கேடாய் போய் முடியும்.. ஜெய்யின் சினிமா வாழ்க்கை சோலி முடிய இந்த 2 நடிகைகள் தான் காரணம்

Actor Jai: அஜித்தின் தீவிர ரசிகரான ஜெய் விஜய்யின் பகவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் சென்னை 600028. இதன்பிறகு ஜெய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சுப்ரமணியபுரம்.

இவ்வாறு சினிமாவில் வளர்ச்சி அடையும்போது அடக்கம் என்பது தேவை. ஆனால் இளவட்டங்களுடன் சேர்ந்து ஜெய் விளையாட்டாக இருந்தது அவரது கேரியருக்கு பிரச்சினையாக இருந்தது. அதுமட்டுமின்றி சில நடிகைகளுடன் ஜெய் கிசுகிசுக்கப்பட்டதால் அவரது பெயர் சினிமாவில் டேமேஜ் ஆனது.

Also Read : ஜெய்யை வளர்த்துவிட்ட 5 படங்கள்.. ஓரளவு இன்று வரை நிலைத்து நிற்க காரணம் அட்லீ

அதாவது எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததன் மூலம் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அந்தச் சமயத்தில் இருவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி தற்போது அஞ்சலி பல பேட்டிகளில் ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக ஒற்றுக்கொண்டு உள்ளார்.

மேலும் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அடுத்ததாக எண்ணி துணிக படத்தில் நடித்ததன் மூலம் அதுல்யா ரவி உடன் ஜெய் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : நல்ல திறமை இருந்தும் வாயால் அழிந்த 5 இளம் நடிகர்கள்.. 2 கோடிக்கு வலை விரிக்கும் ஜெய் பீம் மணிகண்டன்

சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சர்வசாதாரணம் என்றாலும் ஜெய் அடிக்கடி இவ்வாறு சர்ச்சையில் சிக்குவது அவருக்கு அவப்பெயரை வாங்கி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஒரு கட்டத்தில் உயரும் போது ஆணவத்துடன் பேசியது அவர்களை எரிச்சல் அடைய செய்துள்ளனர்.

ஆனால் அதையெல்லாம் இப்போது ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த உள்ளாராம் ஜெய். இப்போது ஒரு படத்திற்கு இசையமைத்துள்ள இவர் அதில் ஒரு பாடல் வரிகளையும் எழுதி இருக்கிறாராம். இதன் மூலம் விட்ட மார்க்கெட்டை ஜெய் மீண்டும் தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : போகும் இடமெல்லாம் அந்த மாதிரி பட வாய்ப்பு கேட்கும் ஜெய்.. விஜய் சேதுபதி மாதிரி ஆசைப்பட்டா எப்படி ப்ரோ!

Trending News