தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலக்கட்டத்தில் நடித்துக்கொண்டிருந்த பிரபலமான நடிகர் தான் ஜெய்சங்கர். இவர் சண்டை படங்களில் நடித்திருந்தாலும், குடும்ப கதைகளிலும் பல படங்களில் துப்பறிவாளன் ஆகவும், காவலராகவும் வேடமேற்று நடித்ததால் இவரை ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் ரசிகர்கள் அழைத்தனர்.
இவருடைய மூத்த மகன் விஜய் சங்கர் கண் மருத்துவராக உள்ள நிலையில், இளையமகன் சஞ்சய் சங்கர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சஞ்சய் சங்கர் ‘இசை’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன்பிறகு தற்போது சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதுவும் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக இப்போது தொழில் அதிபர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் சஞ்சய் சங்கர்.
இந்த சீரியலில் கதாநாயகியாக கடத்தப்படும் பாக்கியா தொழில் ரீதியாக முன்னேற வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருப்பதால், வீட்டிலிருந்தே சமைத்து அதை வீடு வீடாக த்து கொடுத்து வருகிறார். அப்படித்தான் இந்த தொழில் அதிபர் ராஜசேகர் வீட்டிற்கும் சமைத்து கொடுத்துள்ளார்.
அதன் பிறகு தொழிலதிபர் பாக்கியாவிற்கு ஆயிரம் பேருக்கு சமைக்க வாய்ப்பு கொடுத்து கொடுத்தது தற்போது சீரியலின் திருப்புமுனையாக அமைந்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் சஞ்சய் சங்கர் நடித்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் இவருடைய காட்சிகள் அதிக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மௌனராகம் என்ற சீரியலில் பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு நடித்திருப்பார். அதேபோல் விஜய் டிவி தற்போது ஜெய்சங்கர் மகனையும் நடிக்க வைத்துள்ளது. எனவே விஜய் டிவியின் இந்த செயல் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.