தமிழ் சினிமாவில் மட்டும் தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாத நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நீங்காத இடம் பிடித்தவர் எம் ஜி ராமச்சந்திரன் என்கிற எம்ஜிஆர். இவருக்கும் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலலிதாவுக்கும் இடையில் காதல் இருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஜெயலலிதா மீது வெறித்தனமான காதலில் இருந்தாராம் எம்ஜிஆர். ஜெயலலிதாவிடம் எந்த ஒரு நடிகர் சிரித்துப் பேசினாலும் அவருக்கு உடனே கோபம் வந்து அவர்களை ஏதாவது செய்யவேண்டும் எனும் அளவுக்கு இறங்கி விடுவாராம். இந்த செய்திகள் அப்போதே எம்ஜிஆரின் வட்டாரங்களிலிருந்து கசிந்தது தான்.
அதேபோல் ஜெயலலிதாவும் மற்ற நடிகர்களுடன் அதிகம் பேசாமல் இருந்து வந்த நிலையில்தான் ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெயலலிதா சரணமாக இங்கிலீஷ் பேசுபவர். அதேபோல் ஜெய்சங்கரும் இங்கிலீஷில் பொறந்து கட்டுவாராம்.
அப்படி இருவரும் படப்பிடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக பேசி சிரித்து மகிழும் அளவுக்கு வந்ததை கவனித்து வந்த சிலர் எப்படியோ எம்ஜிஆரிடம் பத்தி வைத்துவிட்டனர். இதை பார்த்து டென்ஷனான எம்ஜிஆர் உடனடியாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜெய்சங்கர் வீட்டுக்கு சென்று அவரை சுடும் அளவுக்கு கோபம் வந்து விட்டதாம்.
ஆனால் ஜெய்சங்கரின் நல்ல நேரம் அவர் வீட்டில் இல்லை எனவும் ஒருவேளை அவர் இருந்திருந்தால் எம்ஜிஆர் அவரை சுடவும் தங்கி இருக்க மாட்டார் எனவும் அந்தக்கால நடிகை குட்டிபத்மினி சமீபத்தில் ஒரு வீடியோ மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து எம்ஜிஆர் ஜெயலலிதா விஷயத்தில் ஒரு ராவணன் போல் நடந்து கொண்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. காதலுக்கு கண்ணில்லை என சும்மாவா சொன்னாங்க.