அடுத்து நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. அனைத்து அணிகளும் இதற்காக மும்மரமாய் தயாராகி வருகிறது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடர்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் இந்த தொடருக்கு வருகிற 12-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களுக்குண்டான வீரர்களின் தேர்வு பட்டியலை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
துபாயை மையமாகக் கொண்டு இந்த போட்டிகள் அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர், ராவல் பின்டி, கராச்சி ஆகிய இடங்களிலும் இந்த போட்டிகள் நடைபெற உள்ளதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
ஆனால் அங்கே இன்னும் மைதானங்களின் கட்டுமான வேலைகள் சரிவர முடிக்கவில்லை. ஆகையால் வருகிற 27ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவிருக்கும் அனைத்து இடங்களும் சீர்படுத்தவில்லை என்றால்,அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற ஐசிசி முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் மைதானங்கள் கட்டுமான பணி முழுமை பெறவில்லை. இதனால் வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான மைதானங்களை சீர்படுத்த வேண்டும். இல்லையென்றால் போட்டிகளை நாங்கள் பேரிடத்திற்கு மாற்றி விடுவோம் என பிசிசிஐ நிர்வாகி ஜெய்ஷா தெரிவித்துள்ளார்