சினிமாவைப் பொருத்தவரை அதுவும் குறிப்பாக தமிழில் நல்ல காமெடி நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு சொற்பமான நடிகர்கள் மட்டுமே மக்களை சிரிக்க வைத்துள்ளார்.
அதில் எப்போதுமே கவுண்டமணிக்கு தனி இடம் உண்டு. கவுண்டமணி காமெடி வேடங்களில் மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் அசால்ட்டாக நடித்து ஸ்கோர் செய்பவர்.
கவுண்டமணி போலவே தன்னுடைய தனி பாணியில் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை பெற்று நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஜனகராஜ்.
இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய பட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜனகராஜ். கவுண்டமணி பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்தி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போதே மிகவும் பழமையானது என்பது தெரியவருகிறது. அதிலும் ஜனகராஜ் ஒல்லியாக ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். அதேபோல் கவுண்டமணி ஹிட்லர் மீசை வைத்துள்ளார்.
இது எந்த படத்தின் புகைப்படம் என்பதை பகிர்ந்து கொள்ளாமல் வெறும் புகைப்படத்தை மட்டும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் ஜனகராஜ்.
![goundamani-janagaraj-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/goundamani-janagaraj-cinemapettai.jpg)