திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

சந்தியா ராகம் சீரியலில் போலீஸிடம் சரண்டரான ஜானகி.. வீட்டுக்கு திரும்பிய கதிர், அதிர்ச்சியில் இருக்கும் ரகுராம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி செய்த சூழ்ச்சியில் ரகுராம் மாட்டிக் கொண்டார் என்பதற்கு ஏற்ப கதிர் என் மருமகனே கிடையாது. என் பொண்ணுக்கும் கணவர் இல்லை என்று பஞ்சாயத்தில் சொல்லிவிட்டார். உடனே புவனேஸ்வரி இதுதான் சான்ஸ் என்று தனத்தையும் பஞ்சாயத்துக்கு வர சொல்லி தனத்தின் வாயாலேயே எங்க அப்பா என்ன முடிவு எடுக்கிறாரோ, அதுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று சொல்ல வைத்து விட்டார்.

உடனே பஞ்சாயத்தில் வைத்து தனத்திற்கும் கதிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரித்து விட புவனேஸ்வரி சொல்லிவிட்டார். அதன்படி காசு வெட்டி தனம் கதிர் பிரிய போவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடைபெறப் போகிறது. இந்த விஷயத்தை தனம் வீட்டிற்கு வந்து சொன்னதும் மாயா மற்றும் ஜானகி அதிர்ச்சியாகி விட்டார்கள். அத்துடன் ஏன் இப்படி ஒரு விபரீதம் முடிவை எடுத்தாய்.

கதிர் உன்னுடைய வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறான் என்று உனக்கு தெரியும். அந்த கார்த்திக்கும் நல்லவன் இல்லை என்பதும் உனக்கு தெரியும். அது மட்டும் இல்லை கார்த்திக்கை கதிர் கொலை பண்ண வில்லை, இதெல்லாம் தெரிந்தும் நீ ஏன் இப்படி உங்க அப்பாவுக்காக உன் வாழ்க்கையை பாழாக்கி விட்டாய் என்று ஜானகி கேட்கிறார்.

அதற்கு தனம் நான் அப்பாவுக்காக பேசவில்லை என்றால் அப்பாவை உயிரோடையே பார்த்திருக்க முடியாது. அப்பாவுக்காக தான் நான் அப்படி ஒரு விஷயத்தை சொன்னேன் என்று சொல்லி அழுது ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு ஜானகி என்ன பண்ணுவது என்று தெரியாமல் தனத்தையும் மாயாவையும் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்.

அதே நேரத்தில் தன் மகளுடைய வாழ்க்கையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார். அங்கே போனதும் நான் தான் கார்த்திக்கை கொலை பண்ணேன் என்று சொல்லிய நிலையில் அங்கு இருக்கும் போலீஸ், மேல் அதிகாரிக்கு போன் பண்ணி தகவல் கொடுக்கிறார். அதன் படி அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நடந்த உண்மை என்னவென்று ஜானகிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

ஜானகி நான் தான் கார்த்திக்கை கொலை செய்தேன் என்று சொல்லிய நிலையில் கதிரை விட்டு விடுகிறார்கள். மேலும் கதிரை ரகுராம் வீட்டிற்கு கூட்டிட்டு வரும் போலீஸ், கதிரை விட்டுவிட்டு இவர் கொலை செய்யவில்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே ரகுராம் யாரு கார்த்திகை கொலை பண்ணாங்க என்று கேட்கிறார். அதற்கு போலீஸ், உங்க மனைவி ஜானகி தான் கொலை பண்ணதாக போலீசில் சரண்டர் ஆகி விட்டதாக சொல்கிறார்.

இதை கேட்டதும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிவிட்டார்கள். அத்துடன் மாயாவும், ஜானகி பெரியம்மா உண்மை சொல்லி விட்டார்களே என்ற வருத்தத்துடன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கிறார். ஜானகி எடுத்த முடிவு அதிரடியாக இருந்தாலும் புவனேஸ்வரி திட்டத்தில் மண்ணை அள்ளி போடும் விதமாக கதிர் வெளி வந்ததால் இனி தனத்தின் வாழ்க்கையில் குளறுபடி பண்ண வாய்ப்பு இல்லை.

ஆனாலும் கார்த்திக் உயிரோடுதான் இருக்கிறார் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பதை மாயா கண்டுபிடித்து ஜானகியை கூடிய சீக்கிரத்தில் வெளியே கூட்டிட்டு வந்து விடுவார். அத்துடன் கதிர் மற்றும் மாயா இருவரும் சேர்ந்து தனத்தின் வாழ்க்கையை காப்பாற்ற தான் செய்திருக்கிறார்கள் என்று ரகுராம் மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களும் புரிந்து கொள்ளப் போகிறார்கள்.

Trending News