புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

சந்தியா ராகம் சீரியலில் புவனேஸ்வரின் முகத்திரையை கிழித்த ஜானகி.. திருந்திய ரகுராம், மாயாவுக்கு கிடைத்த வெற்றி

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ஜானகியை ஜெயிலுக்கு போக விடாமல் ஜாமினில் வெளியே எடுக்க வேண்டும் என்றால் அதற்கு கோர்ட்டில் 10 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று லாயர் தெளிவாக மாயாவிடம் சொல்லிவிட்டார். ஆனால் இந்த பத்து லட்ச ரூபாயை ரகுராமிடம் கேட்டதற்கு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

பிறகு பத்மாவும் பார்வதியும் நகையை கொடுக்காமல் போன நிலையில் ஜானகியை வெளியே எடுப்பதற்காக மாயா சிவராமன் மற்றும் மணிவண்ணன் மூன்று பேரும் சேர்ந்து தெரிந்தவர்களிடம் பணம் கேட்க போய்விட்டார்கள். அப்படி அவர்கள் கொடுக்கும் பட்சத்தில் புவனேஸ்வரி அந்த நபருக்கு போன் பண்ணி பணத்தை கொடுக்க விடாமல் தடுத்து விடுகிறார்.

பிறகு மாயா, மணிவண்ணன் மற்றும் சிவராமனை கோர்ட்டுக்கு அனுப்பிவிட்டு பத்து லட்ச ரூபாயை நான் ரெடி பண்ணிட்டு வருகிறேன் என சொல்கிறார். அந்த வகையில் மாயாவுக்கு 10 லட்ச ரூபாய் கிடைத்துவிட்டது. அதை கோர்ட்டுக்கு எடுத்துட்டு வரும்போது புவனேஸ்வரி, ஆட்களை அனுப்பி ஆட்டோவில் இருக்கும் பணத்தை மாற்றி அதற்கு பதிலாக வேஸ்ட் பேப்பரை போட்டு வைத்து விடுகிறார்.

இது தெரியாத மாயா அந்த பணப்பையை எடுத்துட்டு வந்து லாயரிடம் கொடுக்கிறார். அப்படி கொடுக்கும் போது அதில் பணம் இல்லை என்று அனைவரும் அதிர்ச்சியாகிய நிலையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் எல்லோரும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் மாஸ் எண்டரி கொடுத்து ரகுராம் காரை விட்டு இறங்கி வருகிறார்.

அப்பொழுது எல்லோரும் ரகுராம் நம்மளை திட்டி சண்டை போடுவார் என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ரகுராம் அப்படி எதுவும் பண்ணாமல் ஜானகிக்கு டெபாசிட் பண்ண வேண்டிய 10 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விடுகிறார். இதனால் லாயர் மத்த எல்லா விஷயங்களையும் முடித்துவிட்டு ஜானகியை வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிடுகிறார்.

இந்த சமயத்தில் மாயா, ரகுராம் மற்றும் ஜானகி பெரியம்மாவை தனியாக பேச விடலாம் என்று பிளான் பண்ணி மணிவண்ணன் மற்றும் சிவராமனை கூட்டிட்டு போய்விடுகிறார். பிறகு ஜானகி ரகுராம் கூட காரில் போகிறார். அப்பொழுது ரகுராம் ஜானகி கூட்டிட்டு கோயிலுக்கு போய் அங்கு இருக்கும் குளத்தில் தலைமுழுக சொல்லிவிட்டு புதுப்படவையை கட்டிட்டு வர சொல்கிறார்.

இதனை தொடர்ந்து கோயிலில் அர்ச்சனை பண்ணிய பிறகு இரண்டு பேரும் சேர்ந்து ஹோட்டலுக்கு சாப்பிட போகிறார்கள். இப்படி ரகுராம் ஜானகியை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார். அந்த வகையில் மாயா சொன்னபடி ரகுராமுடன் ஜானகியை சேர்த்து வைத்து விட்டார்.

அடுத்ததாக கார்த்திக் சாகவில்லை என்று ஜானகிக்கு தெரிந்த நிலையில் நேரடியாக புவனேஸ்வரி வீட்டுக்கு போய் உன்னுடைய பழிவாங்கும் எண்ணத்துக்காக பெத்த பிள்ளையை இறந்துட்டான் என்று ஊர் முன்னாடி சொல்லி நம்ப வைத்து நடிக்கிறாயா என்று புவனேஸ்வரி முகத்திரையை கிழிக்கும் விதமாக நல்ல நான்கு கேள்வி கேட்டு வருகிறார். அத்துடன் கார்த்திக் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்ற உண்மையையும் மாயா நிரூபித்து விடுவார்.

Trending News