செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பாத்ரூமில் குயின்ஸி காலில் விழுந்த ஜனனி.. தெரியாம செஞ்சதை பில்டப்பாக்கிய பிக்பாஸ்

தினந்தோறும் பிரச்சனைகளாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று குயின்சி மற்றும் ஜனனி இருவருக்கிடையே மிகப்பெரிய மோதல் வெடிக்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. பொதுவாகவே பிக் பாஸ் வீட்டில் குயின்சியின் நடவடிக்கை நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் பிடிக்கவில்லை.

ஏனென்றால் விளையாட்டில் கவனத்தை செலுத்தாமல் புறணி பேசுவது, தேவையில்லாமல் கோபப்பட்டு முகத்தை திருப்புவது என்று அவரின் நடவடிக்கைகள் எரிச்சலை கிளப்புகிறது. அதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனி குயின்சியின் காலில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஜனனி, குயின்சியின் டவலை எடுத்து உபயோகப்படுத்தி விட்டார்.

Also read : தலைகணத்தில் தலைகால் புரியாமல் ஆடும் போட்டியாளர்.. குட்டு வைக்க போகும் பிக்பாஸ்

இதனால் கடுப்பான குயின்சி ஜனனியை அனைவரின் முன்பும் திட்டி விடுகிறார். ஆனால் ஜனனி தெரியாமல் எடுத்து விட்டேன் என்று எவ்வளவோ சமாதானம் பேசுகிறார். குயின்சி ஜனனி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன ஜனனி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

அதன் பிறகும் கூட குயின்சி அதைப்பற்றியே பேசியதால் கடுப்பான ஜனனி கையில் இருக்கும் காபி கப்பை கீழே போட்டு உடைக்கிறார். இப்படி வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்த பலரும் குயின்சிக்கு ஜனனி மீது தீராத வன்மம் இருப்பதாக கூறுகின்றனர். அதனால் தான் ஒவ்வொரு முறையும் ஜனனியை அவர் காயப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also read : பிக்பாஸில் சவுண்டு சரோஜாவாக மாறிய நடிகை.. தர லோக்கலாக மாறிய பிக்பாஸ் வீடு

ஏற்கனவே ஒரு டாஸ்க்கின் போது ஜனனி வெற்றி பெற்றது குயின்சிக்கு பிடிக்கவில்லை. அது அவருடைய முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது. அதனாலேயே அவர் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார். தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை விடாத குயின்சி நன்றாக ஜனனியை பழி வாங்கி இருக்கிறார்.

இந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் காட்டப்பட இருக்கிறது. ஆனால் உண்மையில் உப்பு சப்பில்லாத இந்த விஷயத்தை பிக் பாஸ் ஏதோ மிகப்பெரிய சண்டை போல் பில்டப் செய்துள்ளார். இந்த நிகழ்வு நிச்சயம் கமலின் பார்வைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை ஆண்டவர் எப்படி கையாள்வார் என்பதை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : பிக்பாஸ் போய் பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. அது ஒரு பித்தலாட்டம் எனக் கூறி பப்ளிசிட்டி தேடும் நடிகர்

Trending News