சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியலில் குடும்பத்தில் பெண்களுக்கு நிச்சயம் சுயமரியாதை இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இவ்வளவு நாள் ஆணாதிக்கத்தின் கீழ் இருந்த குணசேகரன் வீட்டு மருமகள்களான ஜனனி, ஈஸ்வரி தொடர்ந்து அடுத்தடுத்த மருமகள்களும் இப்போது தங்களது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுகின்றனர்.
நந்தினி ரேணுகாவும் ஞானத்திடம் வீட்டில் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறுகின்றனர். இதற்கு இடையில் கதிர் நந்தினியை உனக்கு நேரம் சரியில்லை என்று நன்றாக தெரிகிறது உன்னை வைத்துக்கொள்கிறேன் என்று கோபத்துடன் அதட்டுகிறார். உடனே நந்தினி நக்கலாக கதிரிடம் அதுதான் கல்யாணம் செய்து கூட்டி வந்து விட்டீர்களே என்று கூறுகிறார். ரணகளத்திலும் ஒரு குதூகலம் போல் நந்தினியின் நக்கல் பேச்சானது ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
Also Read: 25 வருடமாகியும் மக்கள் கொண்டாடும் சன்டிவியின் ஒரே சீரியல்.. கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய நடிகை
குணசேகரனின் குடும்ப வக்கீல் சக்தியை கையெழுத்து போடுவதற்காக வர சொல்லி இருக்கிறார். அப்பொழுது அவர் நீங்கள் வெட்டியாக தானே இருக்கிறீர்கள். எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது அதனால் தான் உங்களை இங்கு வர சொன்னேன் என்று சக்தியிடம் கூறுகிறார். நீங்கள் உங்கள் அண்ணன் சேர்த்து வைத்த சொத்தில் எந்த வேலையும் செய்யாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் ஃப்ரீயாக தான் இருப்பீர்கள் என்று நீங்களே வந்து கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுங்கள் என்று வர சொன்னேன்.
வக்கீல் நாங்கள் என்ன உங்கள மாதிரி வேலை இல்லாமலா இருக்கின்றோம் எங்களுக்கு தலைக்கு மேல் வேலை உள்ளது என்று சக்தியிடம் நக்கலாக கூறுகிறார். வக்கீல் பேசியதே கேட்டவுடன் சக்திக்கு கோபம் தலைக்கு ஏறியது. நாம் இப்படி அண்ணன் சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதால் தான் மற்றவர் எல்லாம் என்னை இப்படி கேலி செய்கிறார்கள் என்று நினைத்து சக்தி சுயமாக ஒரு முடிவினை எடுக்கிறார்.
Also Read: லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் 2 மகள்கள்
சக்திக்கு வெளியிடத்தில் சுயமரியாதைக்கே களங்கம் ஏற்பட்டதால் தற்பொழுது சுயமாக ஒரு முடிவினை எடுத்துள்ளார். சக்தி குணசேகரனிடமும் வீட்டில் உள்ள மற்றவர்களிடமும் தனக்கு சொத்தில் எந்த பங்கும் வேண்டாம் என்றும் தான் வேலைக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சக்தியை கடுப்பேற்றும் விதமாக கதிர் மேலும் மேலும் உன்னை யார் இப்படி எல்லாம் செய்ய சொன்னார்கள் என்று எனக்கு தெரியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். நீ இப்படி எல்லாம் பேசுவதற்கு அப்பத்தாவும் ஜனனியும் தான் காரணம் என்று அவர்களை கதிர் குறை கூறுகிறார்.
உடனே சக்தி எனது முடிவிற்கு யாரும் காரணம் அல்ல நானே சுயமாக இந்த முடிவினை எடுத்து உள்ளேன் என்று தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று விடுகிறார். அப்பத்தா ஜனனியிடம் சக்தி குணசேகரன் போன்று மோசமானவன் இல்லை என்று ஒரு கை கிடைத்தால் போதும் கூடிய சீக்கிரத்தில் வாழ்க்கையில் முன்னேறி விடுவார் என்று அப்பத்தா ஜனனியிடம் சொல்லிக் கொண்டு இருப்பது போன்று ப்ரோமோ வெளியாகி உள்ளது.
சக்தி தனது வாழ்க்கையில் முதல் முதலாக சுயமாக ஒரு முடிவினை எடுத்துள்ளார். அதில் அண்ணன் சொத்தை அனுபவிக்காமல் தான் சுயமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை கையில் எடுத்துள்ளார். ஆனால் குணசேகரன் சக்தியை நீ ஸ்கூல் மட்டும் தான் முடித்துள்ளாய் உனக்கு யாரு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள் என்று நக்கலாக பேசுகிறார். சக்தி அனைத்து அவமானங்களையும் மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் ஜெயிக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.