வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குணசேகரனை ஓவர்டேக் செய்யும் ஜனனி.. ரேணுகா கதிருக்கு கொடுத்த பதிலடி

சீரியல் மூலமாக ரசிகர்களை அதிகமாக ஈர்க்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த வகையில் தற்போது குணசேகரனுக்கும், ஜனனிக்கும் யுத்த போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது அனைவருக்கும் தெரிந்ததே யாரிடம் உண்மை இருக்கிறதோ அவர்கள் ஜெயிப்பது நிச்சயம். அதனால் ஜனனி எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு வெற்றி தான் கொடுக்கப் போகிறது.

இதற்குப் பிறகாவது குணசேகரன் திருந்துவார் என்று நினைத்தால் கண்டிப்பாக அது நடக்காது. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா இந்த நாடகமே சீக்கிரத்தில் முடிந்து விடுமே. அதனால் அந்த ஒரு வாய்ப்பை இயக்குனர் கொடுக்க மாட்டார். இதில் கொஞ்ச நாளாகவே ஆதிரை அருண் காதல் கல்யாணம் மற்றும் 40% சொத்து இதுதான் மூலக்கருத்தாக போய்க்கிட்டு இருக்கு.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

ஆனா அந்த அளவுக்கு ஆதிரை உடைய காதல் பார்ப்பவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவள் யாரை கல்யாணம் பண்ணினா என்ன. இவளுக்கு சரியான ஆளு கரிகாலன் தான். பேசாம குணசேகரன் சொன்ன படி கரிகாலனை கல்யாணம் பண்ணி வச்சிடுங்க அப்படி தான் தோணுகிறது. ஏனென்றால் குணசேகரனை கூட கொஞ்சம் சேர்த்துக்கலாம் இந்த ஆதிரையை மட்டும் நம்பிடவே முடியாது.

குணசேகரை மிஞ்சும் அளவிற்கு ஆதிரையின் கேரக்டர் இருந்தது.  ரேணுகா நந்தினி மற்றும் ஈஸ்வரியை படாதபாடு படுத்தி இருக்கா. என்னதான் இப்ப நான் மாறிட்டேன்னு சொல்லி இருந்தாலும் ஆதிரை மேல் இப்பொழுது வரை ஒரு ஈடுபாடு வரவில்லை. அடுத்ததாக ஜனனி, குணசேகரனை எப்படியாவது தோற்கடிக்கணும் என்று தான் ஆதிரைக்கு முழு சப்போர்ட்டாக இருக்கிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

தற்போது வருகிற எபிசோடுகளை பார்க்கும் பொழுது ஜனனியை விட ரேணுகா, நந்தினி ரொம்பவே பெஸ்ட் அப்படிங்கிற மாதிரி தான் கதைப்படி நகர்ந்து வருகிறது. இவர்கள் ஒவ்வொரு முறையும் குணசேகரன் மற்றும் கதிர் இவர்கள் இருவரும் ஏதாவது சொல்லும் போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குத்தி காட்டி நக்கலாக பேசும் போது மனதில் இருக்கிற பாரமே குறைந்தது போல் ஒரு உணர்வு கொடுக்கிறது. அந்த அளவுக்கு தற்போது குணசேகரனை ஓவர் டேக் பண்ணி வருகிறார்கள்.

இதனை அடுத்து ஜனனி மற்றும் மொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக ஒரு சதி வேலையை ஈடுபட்டு அவரை கவுக்கிறதுக்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. பார்க்கலாம் இது எந்த மாதிரியான திருப்பத்தை யாருக்கு கொடுக்கிறது என்று. எது எப்படியோ இந்த வீட்டு மருமகள் இனிமேலாவது குணசேகரனை எதிர்த்து சுயமாக நிற்பதை பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கும்.

Also read: டிஆர்பிக்காக கெஞ்சி கூத்தாடிய விஜய் டிவி.. கோபி எடுத்த அதிரடி முடிவு

Trending News