புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மிஸ் சென்னை பட்டம் பெற்ற அழகியை அலேக்காக தூக்கிய ஜீ தமிழ்.. இவரு ஒரு வீராங்கனை ஆச்சே

சினிமாவுக்கு திரைப்படங்கள் இடையே போட்டி இருக்கிறது. அதேபோல் டிவி நிகழ்ச்சிகள் இடையும் தற்போது போட்டி அதிகரித்துள்ளது. டிஆர்பியில் முதலிடத்தில் பிடிக்கிறார் என்பதற்காக தற்போது பல தொலைக்காட்சிகளும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அப்படி ஜீதமிழ் தற்போது புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வருகிறது.

தமிழில் ஔிபரப்பாகும் சேனல்களில் மக்களின் மனதில் நிலைத்து நிற்பவை யாவும் எல்லாம் கலந்து வெளியிடும் சில சேனல்கள் மட்டுமே. அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஔபரப்பாகி வந்த “யாரடி நீ மோகினி” முடித்து வைக்கப்பட்டது.

யாரும் எதிர்பாரா தருணத்தில் முடித்து வைக்கப்பட்ட இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அது இரண்டாம் பாகம் எடுப்பதாக இல்லை என்றும் அடுத்ததாக “நினைத்தாலே இனிக்கும் ” என்கிற பெயரில் ஒரு சீரியலுக்காக தயாராகுவதாகவும் குழுவினர் கூறியிருந்தனர்.

janani
janani

இந்த நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரயலுக்கான புரோமோவை வெளியிட்டுள்ளது குழு. இந்த நிலையில் மிஸ் சென்னை பட்டம் வென்ற தேசிய போட்டி வரை நீச்சலில் வெற்றி கண்ட ஜனனி லீட் ரோலில் நடிக்கிறார்.

நினைத்தாலே இனிக்கும் சீரியலின் புரோமோ வெளியானதை தொடர்ந்து நடிகையாக அறிமுகமாகும் ஜனனி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Trending News