Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி எப்படி அவருக்கான ஒரு பாதையை அமைத்துக் கொண்டாரோ, அதே மாதிரி நந்தினியும் முயற்சி எடுத்து விட்டார். அதாவது அவருக்குத் தெரிந்த சமையலை வைத்துக்கொண்டு முன்னேறிடலாம் என்று நினைத்தபொழுது அதைக் கெடுத்து விட்டார் கதிர்.
அதனால் தற்போது சமைச்சு கொடுக்கும் சமையல்காரியாக நந்தினி வேற ஒரு வீட்டில் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்த சமயத்தில் நந்தினி அப்பா, அந்த குடும்பத்திற்கு போன பொழுது நந்தினியை பார்த்ததும் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டார். அதன் பின் நந்தினி, அப்பாவிடம் எனக்கும் என்னுடைய மகள் தாராவிற்கும் ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்றால் நான் சொந்தமாக வேலை பார்த்தால் மட்டுமே முடியும் என்று உணர்வுபூர்வமாக பேசி நந்தினி அப்பாவை லாக் செய்து விட்டார்.
அடுத்ததாக புதிதாக வந்த கிருஷ்ணசாமி நேரடியாக குணசேகரனிடம் பேசுவதற்கு வீட்டிற்கு வந்து விட்டார். வந்ததும் ஜனனியை பற்றிய விஷயங்களை சேகரித்துக் கொண்டார். அத்துடன் இவர் நாச்சியப்பன் மகள் என்கிற உண்மையும் தன் குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்பதையும் தெரிந்து கொண்டார். அந்த வகையில் ஜனனியின் தம்பியாகிவிட்டார்.
ஆனால் கிருஷ்ணசாமிக்கு ஏற்கனவே சொத்து கேட்டு நாச்சியப்பன் பசங்க வந்து விடுவாரோ என்ற ஒரு எண்ணம் இருந்தது. அந்த வகையில் தற்போது ஜனனியை தெரிந்து கொண்ட பிறகு என்ன சூழ்ச்சி செய்யப் போகிறாரோ என்பது ட்விஸ்ட் ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கதிர் தாராவின் ஸ்கூலுக்கு வந்த பொழுது மர்ம நபர்களால் தர்ம அடி வாங்கிக் கொள்கிறார்.
இதை தூரத்தில் இருந்து பார்த்த நந்தினி தாரா கதிருக்கு இப்படி ஒரு நிலைமை என்றதும் பரிதவித்து ஓடி வருகிறார்கள். அந்த வகையில் கதிரை காப்பாற்றும் நந்தினி அடுத்தடுத்து செய்யும் செயல்களில் கதிரின் மனசு மாற வாய்ப்பு இருக்கிறது. இவர் மாறினால் மட்டுமே நாடகம் இன்னும் அதிகமாகவே சூடு பிடிக்கும். குணசேகரின் மொத்த ஆணவமும் அடங்கும்.
இதற்கிடையில் கதிரை வெளுத்து வாங்கியது கிருஷ்ணசாமியின் அடியாட்களாக தான் இருக்கும். காரணம் இவரை அடித்து அதில் ஜனனியை சிக்க வைப்பது தான் அவருடைய பிளான். அடுத்ததாக கிருஷ்ணசாமி யார் என்கிற உண்மை ஜனனிக்கு தெரிந்தால் அடுத்தடுத்து கதை இன்னும் சுவாரசியமாக அமையும்.
Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வாங்கும் சம்பளம்.. தெனாவட்டு காட்டும் வேல ராமமூர்த்தி