புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குணசேகரன் மூக்கை உடைத்த ஜான்சிராணி.. ரணகளமான எதிர்நீச்சல் சீரியல்

சன் டிவியில் வழங்கும் அனைத்து அவார்டுக்கும் தகுதியான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் மட்டுமே. ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு புதுப்புது திருப்பங்களை காட்டி பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை அதிக அளவில் தூண்டக் கூடியதாக இருக்கிறது. அதை இந்த நாடகம் வழக்கமாகவே வைத்து வருகிறது.

பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணுக்கு யார் பக்கபலமாக இருந்தாலும் கணவர் கண்டிப்பாக கூட இருந்தால் தான் அவருடைய வளர்ச்சி முழுமையானதாக இருக்கும். ஆனால் நம்ம ஜனனிக்கு அந்த மாதிரி இதுவரை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தனியாக மட்டுமே இருந்து போராடி வந்தார். ஆனால் அன்று யார் ஜனனியே வேண்டாம் என்று விவாரத்தில் கையெழுத்து போட்டாரோ அந்த சக்தியை, ஜனனிக்கு சப்போர்ட் செய்கிறார்.

Also read: தேங்காய் மண்டையனை போட்டுத் தள்ள துடிக்கும் சவுண்ட் சரோஜா.. அப்பத்தா, எஸ்கேஆர் க்கும் வலை விரித்த குணசேகரன்

அவர், ஜனனியை பற்றி யாராவது ஏதாவது சொன்னீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அதையும் மீறி யாராவது கஷ்டப்படுத்தினால் நான் அதிகமா பேச வேண்டியது இருக்கும் என்று சொன்னது பார்த்து ரசிக்க கூடியதாக இருந்தது. அத்துடன் ஜனனியை கையப்பிடித்து அப்பத்தாவிடம் கூட்டு போயி ஏன் எல்லாரும் இப்படி பேசுறீங்க. எனக்கு கேக்குறதுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கிறது என்று கூறுகிறார்.

அதற்கு அப்பத்தா இதெல்லாம் எந்த உரிமையில் நீ கேட்கிற அவ என்ன உன் பொண்டாட்டி என்கிற உரிமையா என்று அப்பத்தா கேட்க. அதற்கு சக்தி முடிவு பண்ண வேண்டியது இனிமேல் ஜனனி என்று கூறுகிறார். இதைக் கேட்ட ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து இருந்தால் அது கண்டிப்பாக பார்க்க நன்றாகவே இருக்கும்.

Also read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

இதற்கிடையில் திடீரென்று இப்பொழுது மருமகளுக்குள் ஏன் இந்த மாதிரி விரிசல் விழுகிறது என்று தெரியவில்லை. இதுவரை நந்தினி ஒரு காமெடி பீஸ் என்று நினைத்தால் இவர் இன்று பேசியது சற்று வித்தியாசமாக இருக்கிறது. அடுத்தடுத்து என்னதான் நடக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்க முடியாத அளவிற்கு கதையை நகர்த்திக் கொண்டு போய்கிட்டு இருக்கார் இயக்குனர்.

அடுத்ததாக நம்ம ஜான்சி ராணி, குணசேகரனிடம் நியாயம் கேட்டு போயிருக்கா. அதற்கு அந்த கோண வாயேன், ஏய் என்னம்மா ஏன் இடத்துக்கு வந்துட்டு இந்த மாதிரி சத்தம் போடுற வேலைய வச்சுக்காத என்று கூறுகிறார். ஆனால் எதற்குமே அசராமல் ஜான்சி ராணி, சவுண்ட் விடுற வேலையெல்லாம் உன் வீட்டு பொம்பளைங்களோட நிறுத்திக்கோ என்று மிரட்டுவதை பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. ஆனால் குணசேகரின் திருட்டு மொழியை பார்த்தா ஏதோ ஜான்சி ராணி வச்சு டபுள் கேம் ஆட போறாரு என்பது போல் தெரிகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு ஜான்சி ராணி தான்.. அப்பத்தாவின் சொத்தை ஆட்டை போட்ட செம ஸ்கெட்ச்

Trending News