ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சைலன்டாக பட பூஜையை போட்ட தளபதியின் வாரிசு.. விஜய் கலந்து கொள்ளாததன் காரணம்

Thalapthy Vijay – Sanjay: நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படத்தின் சூட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. விஜய் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும்போதே அவருடைய மகன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறதாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய்யின் மகன் கதாநாயகனாக வருவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவர் இயக்குனராகும் ஆசையோடு சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். விஜய்யின் மகனை லைக்கா நிறுவனம் அறிமுகப்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர் அது பற்றி வேறு எந்த செய்தியும் வெளியாகாமல் இருந்தது.

இதற்கிடையில் சஞ்சய்க்கு அவருடைய அப்பா விஜய்யுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது. விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கிடையே இருக்கும் பிரச்சனை தான் சஞ்சய் விஜய் உடன் பேசாமல் இருப்பதற்கு காரணம் எனவும் சொல்லப்பட்டது. அவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதே விஜய்க்கு அறிவிப்பு வந்த பொழுதுதான் தெரியும் என்றும் செய்தி வெளியானது.

Also Read:விஜய்யின் அரசியல்ல நம்பிக்கையே இல்ல.. தளபதிக்கு சப்போர்ட் பண்ணாத நடிகர்களின் லிஸ்ட்

சஞ்சய் வெளிநாட்டிற்கு சென்று இயக்குனராக வேண்டும் என்றுதான் படித்திருக்கிறார் . தன்னுடைய சொந்த முயற்சியில்தான் லைக்காவிடம் இந்த வாய்ப்பை வாங்கி இருக்கிறார். இதில் ஏதாவது ஒரு விஷயத்தில் விஜய் பெயர் வந்துவிட்டால் சஞ்சய்யின் மொத்த உழைப்பும் வேஸ்ட் ஆகிவிடும் என்பதால் தான் இப்படி வதந்திகள் வெளிவருவதாக சொல்லப்படுகிறது.

இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக தன்னுடைய மகன் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த பட பூஜையில் எதற்காக விஜய் கலந்து கொள்ளவில்லை என்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லியோ வெற்றி விழாவுக்காக தாய்லாந்தில் இருந்து வந்த விஜய் தன்னுடைய மகனுக்காக வர முடியாதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

ஒரு வேளை விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகரின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அதேபோன்று தன்னுடைய மகனுக்கு பண்ணக்கூடாது என்று ஒதுங்கி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. விஜய் தன்னுடைய குடும்பத்தை சுற்றி நடக்கும் இது போன்ற வியூகங்களுக்கு இடம் கொடுக்காமல் சந்தேகத்தை தெளிவுப்படுத்த வேண்டும்.

Also Read:600 கோடி வசூல் ஆனா, சம்பளமே தரல.. லியோ இயக்குனருக்கே இந்த நிலைமையா!.

 

 

 

Trending News