விஜய் ஆரம்பித்ததை சட்டவுன் செய்யும் ஜேசன் சஞ்சய்.. மொத்தமாய் ஏழரையை செஞ்சி விட்ட கமல், ரஜினி

vijay-sanjay-kamal-Rajini
vijay-sanjay-kamal-Rajini

சமீபகாலமாக பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கவில்லை. இவர்களை நம்பி பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்த போதிலும் கூட அந்தப் படங்கள் லாபகரமாக அமையவில்லை. இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் தொகையில் படங்களை தயாரிக்கவே யோசிக்கிறார்கள்.

இப்பொழுது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று இழுத்து மூடும் நிலைமைக்கு வந்துள்ளது. கைவசம் வைத்திருக்கும் அந்த மூன்று படங்களை முடித்துவிட்டு எண்டு கார்டு போடப் போகிறார்கள். இவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவரும் பரிதவித்து வருகிறார்கள்.

பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியே பெரிய ஹீரோக்களை துண்டு போட்டு தூக்கி விடுவார்கள். அப்படி கொடிகட்டி பறந்து வந்த லைகா நிறுவனம், இப்பொழுது அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. சமீப காலமாக எதைத் தொட்டாலும் அவர்களுக்கு ஏழ்ரையாக இருக்கிறது.

2014ஆம் ஆண்டு கத்தி படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தார்கள். அதன் பின்னர் இவர்களுக்கு தொட்டதெல்லாம் தொடங்கியது. லாபகரமான கம்பெனியாக வலம் வந்தனர். ஆனால் இப்பொழுது 6- 7ஆண்டுகளாகவே எந்த படமும் ஹிட் ஆகவில்லை.

சமீபத்தில் வெளிவந்த, லால் சலாம், இந்தியன் 2 , வேட்டையன், விடாமுயற்சி போன்ற பெரிய படங்கள் எல்லாம் மோசமான தோல்வியை கொடுத்தது. அதுமட்டுமின்றி ஐ டி ரைடும் இவர்களை கதிகலங்க செய்தது. இப்பொழுது கடைசி படமாக விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப் போகும் படத்தோடு தயாரிப்பை நிறுத்திக் கொள்கிறார்கள். ரஜினி கமல் போன்ற பெரிய ஹீரோக்கள் கூட இவர்களுக்கு கை கொடுக்கவில்லை.

Advertisement Amazon Prime Banner