திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெரிய ஓபனிங் இல்லாத ஜவான் படம் .. ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே ஒதுக்கப்படும் ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷாரூக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 1000 கோடி வரை அசால்ட்டாக வசூல் செய்யும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு படத்தின் காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை உள்ளிட்டவை திரையரங்குகளில் விசில் பறக்க வைத்துள்ளது. மேலும் ஷாருக்கானின் என்ட்ரி, நயன்தாராவின் நடிப்பு, விஜய் சேதுபதியின் வில்லத்தனம், தீபிகா படுக்கோனின் ஆக்ஷன் காட்சிகள் இவை அனைத்தும் ஜவான் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.

Also Read: மொத்த வித்தையையும் இறக்கிய ஷாருக்கான்.. ஜெயித்தாரா அட்லி.? ஜவான் ட்விட்டர் விமர்சனம்

வழக்கம் போல அட்லீ தனக்கேற்றார் போல் சில படங்களின் காட்சிகளை காப்பியடித்து ஜவான் படத்தை கமற்சியல் ரீதியாக ரசிகர்கள் பார்க்கும் வகையில் இயக்கி தன்னை மீண்டும் வெற்றி இயக்குனர் என நிரூபித்துள்ளார். அந்த வகையில் என்னதான் இப்படம் பெரிய அளவில் உலகமெங்கும் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் பெரிய ஓப்பனிங் இல்லாமல் உள்ளது.

பொதுவாக நம் கோலிவுட் பட நடிகர்களின் படங்கள் எப்போதுமே ரசிகர்கள் அதிகாலை 4 மணியிலிருந்து படத்தின் முதல் நாள் முழுவதும் திரையரங்குகளில் ஆர்பரித்து விடுவார்கள். அதிலும் பாலாபிஷேகம், பூ மாலை, பட்டாசு, பெரிய கட் அவுட்டுகள் உள்ளிட்டவை வைத்து அப்படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்காக இருக்கும். ஆனால் இந்த ஒபெனிங் ஜவான் படத்துக்கு இல்லாமல் இருப்பது தான் இப்படத்தின் வசூலுக்கே பங்கம் விளைவிக்கும்படி அமைந்துள்ளது.

Also Read: பழக்க தோஷம் மாறல, தண்டவாளத்தில் ஏறிய அட்லியின் வண்டவாளம்.. விஜயகாந்தின் இந்த படம் தான் ஜவான்

காரணம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உலகம் முழுதும் புகழ்பெற்றவர். இவர் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றாலே அந்த இடமே ஈ மொய்த்தது போல் ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். அந்த அளவுக்கு மாஸான ஷாருக்கானை தமிழக மக்களும் தற்போது வரை ரசித்து தான் வருகிறார்கள். அதன் காரணமாகவே ஷாருக்கான் படம் என்று ஜவான் படத்தை பார்க்க முன்பதிவு டிக்கெட்டுகளை வாங்கி ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இருந்தாலும் ஜவான் படம் பல மொழிகளில் ரிலீஸாகியுள்ள நிலையில், முழுக்க முழுக்க ஹிந்தி படமாகத்தான் அட்லீ இப்படத்தை எடுத்துள்ளார். என்னதான் ஜவான் படத்தில் பல தமிழ் நட்சத்திரங்கள் நடித்தாலும் டப்பிங் படத்தை பார்ப்பது போல் உள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஹிந்தி படமாக தான் பார்த்து வருகின்றனர். இதன் காரணமாகவே ஜவான் படம் தமிழகத்தில் பெரிய ஓப்பனிங் இல்லாமல் உள்ளது.

Also Read: வருட உழைப்பு, அட்லி-ஷாருக்கான் கூட்டணி ஜெயிக்குமா? மிரட்டி விட்ட ஜவான் பட முழு விமர்சனம்

Trending News