வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரு வீடியோவிலே 5 படங்களை காப்பியடித்திருக்கும் அட்லீ.. இது என்ன ஜவானுக்கு வந்த சோதனை

Jawan Movie: ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த சூழலில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் படம் வெளியாக உள்ளதற்கான அறிவிப்பு வீடியோ ஒன்று இன்று வெளியானது.

இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்கள் இடம் பெற்று இருந்த சில காட்சிகள் வெளியானது. இந்நிலையில் அட்லீயின் முதல் படமான ராஜா ராணி படத்தில் இருந்து எடுத்துக் கொண்டால், வேறு படங்களின் சாயலில் எடுத்து இருப்பதாக இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்து வந்தனர்.

Also Read : இது வெறும் ஆரம்பம், இனிமேதான் ஆட்டமே இருக்கு.. ஓவர் பில்டப்பில் வெளிவந்துள்ள ஜவான் வீடியோ

அந்த வகையில் மௌன ராகம் படத்தின் சாயலில் ராஜா ராணி படம் இருந்ததாக கேலி, கிண்டல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் காப்பி சர்ச்சையில் சிக்கி வந்த அட்லீ இப்போது ஜவான் படத்திலும் இதே பிரச்சினையை சந்தித்துள்ளார். அதாவது ஜவான் வீடியோவில் ஆரம்பத்தில் ஒரு குழந்தையை ஏந்துவது போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அப்படியே பாகுபலி காட்சியை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக ஷாருக்கான் முகத்தில் மாஸ் போட்டிருப்பது போல ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது. இது அச்சு அசலாக அந்நியன் படத்தில் விக்ரம் போட்டிருக்கும் மாஸ் போல இருந்தது. மேலும் ஷாருக்கான் முகத்தில் ஒரு துணியால் மறைக்கப்பட்டிருக்கிறார்.

Also Read : மூட்டை முடிச்சை கட்டிய அட்லீ.. ஷாருக்கான் விட்ட டோஸால் ஜவானுக்கு ஏற்பட்ட விடிவுகாலம்

இந்த காட்சி ஹாலிவுட் இடம் பெற்ற டார்க் மார்க் என்ற படத்தில் உள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் இன்னொரு காட்சியில் சிவாஜி படத்தில் ரஜினி மொட்டை அடித்திருக்கும் ஸ்டைலில் ஷாருக்கான் இருக்கிறார். கடைசியாக வலிமை படத்தில் இடம்பெற்ற பைக் காட்சி ஜவான் படத்திலும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு எல்லா படத்தில் இருந்தும் பிட்டு பிட்டாக காட்சிகளை காப்பி அடித்து ஒரே படமாக ஜவான் படத்தை அட்லீ எடுத்திருக்கிறார். இவரை நம்பி பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் கால்ஷீட் கொடுத்த நிலையில் இப்படி செய்வது என அட்லீயை நெட்டிசன்கள் விலாசி வருகிறார்கள். மேலும் படம் வெளியானால் தான் இன்னும் என்னென்ன படங்களை அட்லீ விட்டு வைத்திருக்கிறார் என்பது தெரியவரும்.

jawaan
jawaan

Also Read : கோலிவுட் பெரிதும் எதிர்பார்க்கும் மற்ற மொழி 5 படங்கள்.. பல வருடமாக இழுத்தடிக்கும் அட்லீ

Trending News