வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜவான் சூட்டிங்கில் கலந்து கொண்ட தளபதி விஜய்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான புகைப்படம்

இயக்குனர் அட்லீ பிகில் பட வெற்றியை தொடர்ந்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் பணியாற்றி வருகிறார். இதில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார். ஜவான் பட முதற்கட்ட சூட்டிங் மும்பையில் நடந்தது. இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.

இயக்குனர் அட்லீ நேற்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அட்லீ சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இப்போது படு வைரலாகி கொண்டிருக்கிறது. ஓவர் நைட்டில் இந்த போட்டோ வேர்ல்டு வைட் ட்ரெண்டாகி விட்டது.

Also Read: விஜய்யுடன் அந்த தெலுங்கு நடிகரை சேர்த்து வெச்ச அப்படி படம் எடுக்கிறோம்.. அட்லீயின் பலே பிளான்!

அட்லீ மதுரையை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் அருண்குமார். பேஸ்புக் என்னும் குறும்படத்தின் மூலம் பிரபலமான அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக நண்பன், எந்திரன் படங்களில் பணியாற்றினார். பின்பு இயக்குனர் AR முருகதாஸ் தயாரிப்பில் ராஜா ராணி படத்தை இயக்கினார் .

அட்லீயின் முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே எல்லா சென்டர்ஸ் ஆடியன்ஸையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். இந்த படத்தில் இம்ப்ரஸ் ஆன நடிகர் விஜய் அட்லீக்கு தேறி படத்தை இயக்கம் வாய்ப்பை வழங்கினார். தெறி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் விஜய்யுடன் மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார்.

Also Read: பட வாய்ப்பு கிடைக்காமல் முன்னணி நடிகர் படத்தை தயாரிக்கும் அட்லீ.. எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!

அட்லீ இப்போது படு பிசியாக ஜவான் பட வேலைகளில் இருக்கிறார். ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்கின்றனர். விஜய் இந்த படத்தின் சூட்டிங்கில் ஏற்கனவே கலந்து கொண்டதாக தகவல்களும் வந்தன. நேற்று நடந்த அட்லீ பிறந்த நாள் பார்ட்டியில் தளபதி விஜய் மற்றும் ஷாரூக்கான் கலந்து கொண்ட புகைப்படம் தான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது. விஜய் மற்றும் ஷாரூக்கானுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் அட்லீ,

jawan-shooting-spot-photos
jawan-shooting-spot-photos

அதாவது “என் பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும். என் தூண்களுடன் மிக சிறந்த பிறந்தநாள். மைடியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன் என் தளபதி விஜய்” என பதிவிட்டு இருக்கிறார்.

Also Read: விஜய்க்கு கிடைத்த சரியான வாய்ப்பு.. ரசிகர்கள் காத்திருந்தது வீண்போகவில்லை

Trending News