வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலிவுட் சினிமாவை மீட்டெடுக்க வந்த ஜவான்.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வியாபாரமா?

Jawaan Pre Business: இந்த வருடத்தின் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படம் என்றால் அது ஜவான் தான். இந்த படத்தை அட்லீ இயக்குவது உண்மையிலேயே கோலிவுட்டிற்கு ஒரு பெருமையான விஷயமாக மாறி இருக்கிறது. அதல பாதாளத்தில் கிடந்த இந்தி திரையுலகை எப்படி பதான் திரைப்படம் காப்பாற்றியதோ அதேபோன்றுதான் தற்போது ஜவான் படம் இந்தி திரை உலகை மீட்டெடுக்கப் போகிறது என்று சொல்லலாம்.

படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வீடியோவில் ஷாருக்கான் இதுவரை பார்க்காத அளவிற்கு அதிரடி ஹீரோவாக தோற்றமளிக்கிறார். இதுவே இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. தற்போது ஜவான் படம் ரிலீஸ்க்கு முன்பே ப்ரீ பிசினஸில் எவ்வளவு கோடிகளை கல்லா கட்டி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read:சூர்யாவால் கொலை நடுங்கி போன திரையுலகம்.. உச்சகட்ட பயத்தில் ப்ராஜெக்ட் கே, ஜவான் படக்குழு

இந்த படம் முதல் நாளிலேயே நூறு கோடி வசூலை அள்ளும் என பல சினிமா வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜவான் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் 84 கோடிக்கு வியாபாரம் பேசப்பட்டு இருக்கிறது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும் 134 கோடியாகும். அதேபோன்று இசை உரிமம் 36 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.

மேலும் ஜவான் திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் வியாபாரம் பற்றியும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஓவர்சீஸ் நாடுகளில் இந்த படம் 105 கோடி வரை வியாபாரம் ஆகியிருக்கிறது. தமிழ்நாட்டில் 17 கோடி, ஆந்திராவில் 15 கோடி, கர்நாடகாவில் 15 கோடி, கேரளாவில் 7 கோடி மற்ற மாநிலங்கள் மொத்தமாக சேர்த்து 155 கோடி வரை வியாபாரம் ஆகி இருக்கிறது.

Also Read:ஒரே வார்த்தையில் தெறிக்க விட்ட சூர்யா.. அசுரத்தனமாக வெளிவந்த கங்குவா கிளிம்ஸ் வீடியோ

மொத்தத்தில் தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் சாட்டிலைட், இசை உரிமம் போன்றவை சேர்த்து 250 கோடி, தியேட்டர் உரிமை வியாபாரம் மட்டும் 3 14 கோடி என மொத்தம் 564 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடியாகவும். இதில் படம் ரிலீசுக்கு முன்பே 364 கோடி வரை வியாபாரம் பேசப்பட்டு இருக்கிறது.

மொத்தத்தில் இந்தி திரையுலகில் பணம் முதலீடு செய்வதைப் பற்றி பயந்து கொண்டு இருந்த தயாரிப்பாளர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. மேலும் பாலிவுட் திரைப்படம், தென்னிந்தியாவில் மீண்டும் வியாபாரத்தை தொடங்க இந்த படம் அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது.

Also Read:கொல மாஸாக வெளிவந்த கங்குவா பட போஸ்டர்.. அடேங்கப்பா! அசந்து போன சூர்யா

Trending News