வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரிவால்வர் ரீட்டாவாக மாறிய நயன்தாரா.. மாஸாக மிரட்டும் விஜய் சேதுபதி, வெளிவந்த ஜவான் போஸ்டர்

Jawan: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் பாலிவுட்டில் நாளுக்கு நாள் புதுப்புது எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான முன்னோட்ட வீடியோ, ஃபர்ஸ்ட் சிங்கிள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Also read: மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

ஏற்கனவே முன்னோட்ட வீடியோவில் ஷாருக்கானின் மொட்டை கெட்டப், நயன்தாராவின் அதிரடி என பல விஷயங்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்த போஸ்டரும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் நயன்தாரா இதில் ரிவால்வர் ரீட்டா ரேஞ்சுக்கு கூலிங் கிளாஸ், கையில் நவீன ரக துப்பாக்கி என ஆக்சன் ராணியாக போஸ் கொடுத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் கெட்டப்பும் மாஸாக இருக்கிறது.

Also read: ஜவான் கட்டி விட்ட சலங்கை.. சம்பளத்தை உயர்த்தி ஆடாத ஆட்டம் ஆடும் அட்லி

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கெத்தாக இருக்கும் அவருடைய தோற்றத்தை பார்க்கும் போதே மிரட்டல் வில்லனாக அவர் நடித்திருப்பது தெரிகிறது. இப்படி பல விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் படம் பல மடங்கு வசூல் பெரும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் வெளிவர தொடங்கி இருக்கிறது.

மேலும் இதன் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா இனி ஹிந்தியில் பிசியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது புது போஸ்டரை வெளியிட்டு ப்ரமோஷனை ஆரம்பித்திருக்கும் பட குழு இன்னும் பல ஆச்சரியங்களை கொடுப்பதற்கும் தயாராகி வருகிறது.

புது போஸ்டரை வெளியிட்டு ப்ரமோஷனை ஆரம்பித்திருக்கும் ஜவான்

jawan-poster
jawan-poster

Trending News