வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

Jawaan Release Date: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என இந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை ஷாருக்கான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

ஷாருக்கான் ஏற்கனவே நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பதான் திரைப்படத்தின் தாக்கம் தான் இந்தி சினிமா ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்ப்பதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் அட்லி இந்த படத்தின் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். தமிழ் இயக்குனர் ஒருவர் ஹிந்தியில் சூப்பர் ஹிட் படம் ஒன்றை கொடுத்து விட்டால், அது தமிழ் சினிமாவுக்கே பெருமை என தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய சினிமாக்களில் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்த விஜய் சேதுபதி, ஹிந்தியில் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இதன் பிறகு இவருக்கு இந்தி சினிமா உலகில் மிகப்பெரிய வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று திருமணத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு ஜவான் ரிலீசுக்கு பிறகு, பாலிவுட்டில் பெரிய ஓபனிங் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Also Read:5வது படத்திலேயே கவினுக்கு இரண்டு ஹீரோயின்கள்.. பொறாமையில் பொங்கிய இளம் ஹீரோக்கள்

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என ஷாருக்கான் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மொட்டை தலையுடன், கையில் துப்பாக்கி ஏந்தி இருக்கும் ஷாருக்கானின் போஸ்டர் ரிலீஸ் தேதியோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

                                                              ஜவான் ரிலீஸ் தேதி உடன் வெளியான போஸ்டர்

இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், அடுத்த மாதமே ஜவான் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் கலெக்ஷனில் போட்டிகள் வர வாய்ப்பு இருக்கிறது.

அட்லீயின் மவுசு தமிழ் சினிமாவில் கொஞ்சம் டல்லாக இருந்த நேரத்தில் தான், ஜவான் படத்தை அவர் இயக்குவதற்கு களம் இறங்கினார். இந்த படம் அவருக்கு இந்தியில் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் ரொம்பவே முக்கியமாக இருக்கிறது.

Also Read:சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

Trending News