திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒரு மாதம் தாண்டியும் தணியாத வசூல் வேட்டை.. மிரளவிடும் ஜவான் மொத்த வசூல் ரிப்போர்ட்

Jawan Collection Report: இந்த வருடம் அட்லிக்கு அமோகமாக இருக்கிறது. இதோ அதோ என்று இழுத்தடித்து வந்த ஜவான் ஒரு வழியாக கடந்த மாதம் வெளியான நிலையில் இப்போது வரை தணியாத வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இது எதிர்பார்த்தது தான் என்றாலும் படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த பிறகும் வரவேற்பு இருப்பது பாலிவுட்டையே மிரள வைத்திருக்கிறது.

அந்த வகையில் முதல் படத்திலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கியிருக்கும் அட்லி தற்போது ஜவான் வசூலால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறாராம். இது சில படங்களின் காப்பியாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் வந்தாலும் பாலிவுட் ரசிகர்களை பொறுத்தவரையில் ஜவான் வெறித்தனமான ட்ரீட்டாக இருக்கிறது.

அந்த அளவுக்கு படத்தில் பிரம்மாண்டம் கொட்டி கிடந்தது. அதனாலயே ஷாருக்கானின் முந்தைய படமான பதான் வசூலை ஜவான் வெகுவிரைவிலேயே முறியடித்துக் காட்டி இருக்கிறது. அந்த வகையில் முதல் நாளிலேயே 120 கோடி வரை வசூலித்திருந்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் மாஸ் காட்டி வந்தது.

அதைத்தொடர்ந்து ஒரு வாரத்திலேயே ஜவான் 600 கோடியை தாண்டி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இதெல்லாம் பத்தாது என்ற ரேஞ்சில் தொடர்ந்து வசூல் வேட்டையாடிய இப்படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் என்று பார்த்தால் 1130 கோடியாக இருக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதனாலேயே தயாரிப்பாளரான ஷாருக்கான் இதன் ஓடிடி ரிலீஸை கூட தள்ளி வைத்திருக்கிறார். பொதுவாக படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள் டிஜிட்டல் திரைக்கு வந்துவிடும். ஆனால் இந்த மாதம் விடுமுறை நாட்கள் அதிகம் இருப்பதால் நவம்பர் முதல் வாரத்தில் ஜவான் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருக்கிறது.

கிட்டத்தட்ட 250 கோடிகளை கொடுத்து உரிமையை வாங்கி இருக்கும் இந்த நிறுவனம் இதன் மூலம் இரு மடங்கு லாபத்தை பெறவும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் மிகப்பெரும் வெற்றியை ருசித்திருக்கும் அட்லி ஜவான் மூலம் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர தயாராகி இருக்கிறார்.

Trending News