Jawan: ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது ஜவான் படம். பொதுவாக அட்லீயின் முந்தைய படங்களை எடுத்துக் கொண்டால் காப்பி சர்ச்சை எப்போதுமே அவரை பின்தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் படமான ராஜா ராணி படத்தில் கூட மௌன ராகம் சாயில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
இதை தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் போதும் இவ்வாறு காப்பி சர்ச்சையில் சிக்கி வந்த அட்லீ பாலிவுட் சென்ற பிறகு இதிலிருந்து தப்பிபார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜவான் படம் பல படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக ஆதாரத்துடன் நெட்டிசன்கள் புகைப்படத்தை வெளியிட்டு அட்லீயை கலாய்த்து வருகிறார்கள்.
Also Read : அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி
அந்த வகையில் எங்கள பார்த்தா மெண்டலா இருக்கா என பிசிரு தட்டாமல் அட்லீ 5 படங்களில் காப்பியடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் காட்சிகள் பெரும்பான்மையாக ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் அட்லீ தான் இயக்கிய விஜய்யின் மெர்சல் படத்திலிருந்து காப்பி அடித்திருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதை பார்த்த சிலர் தன்னுடைய படத்திலேயே அட்லீ காப்பியடிக்க ஆரம்பித்து விட்டாரா என கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள்.

Also Read : மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ஷாருக்கான்.. ரெட் ஜெயண்டால் அட்லீ கூட்டணிக்கு விழப் போகும் மரண அடி

அஜித்தின் ஆரம்பம் படத்தில் துப்பாக்கி காட்சிகள் எப்படி இடம்பெறுகிறதோ அதை ஜவான் படத்தில் அச்சு பிசாகாமல் எடுத்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரில் இருந்தும் சில காட்சிகள் அப்படியே ஜவான் படத்தில் இடம்பெற்று இருக்கிறது.

குறிப்பாக நயன்தாரா மற்றும் ஷாருக்கான் இடையேயான காட்சிகள் மணி ஹெய்ஸ்ட் தொடரில் இருந்து அட்லீ சுட்டு இருக்கிறார். மேலும் 2006ம் ஆண்டு APOCALYPTO என்ற படம் வெளியான நிலையில் அதில் இடம்பெற்ற காட்சிகளை துல்லியமாக அப்படியே ஜவான் படத்தில் அட்லீ வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை