வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய ஜவான்.. அட்வான்ஸ் புக்கிங்கில் படைத்த வசூல் சாதனை

Jawan Movie: பாலிவுட்டில் அட்லீ முதல் முறையாக இயக்கி இருக்கும் ஜவான் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஜவான் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று ஜவான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் திறக்கப்பட்டது. மேலும் திறக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே ஜவான் படத்தின் டிக்கெட் அசர வேகத்தில் விற்றதாம்.

Also Read : ஷாருக்கானின் சில்மிஷத்தால் 4 வருடங்களாக இழுத்தடித்த ஜவான் படம்.. அட்லீயை வச்சு செய்த சூப்பர் ஸ்டார்

அதன்படி காலை 10 மணிக்கு தொடங்கிய முன்பதிவு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே 12 மணிக்குள் 41,500 முழு டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டது. சில இடங்களில் ஜவான் படத்தின் டிக்கெட் விலை 2,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். அதன்படி தடையற்ற இருக்கைகளை தவிர்த்து முதல் நாளே 3 கோடி கல்லா கட்டியிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அட்வான்ஸ் புக்கிங் மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 75 கோடி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஜவான் படக்குழு செயல்பட்டு வருகிறதாம். ஏற்கனவே பதான் படத்தின் மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை ஷாருக்கான் கொடுத்திருந்தார்.

Also Read : ரத்தமும் சதையுமாக ஒட்டி வரும் விஜய், அட்லீ.. இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போகுது போல

ஜவான் படத்திற்காக அட்லி ஐந்து வருடங்களாக பணியாற்றி இருந்தார். அதற்கு இப்போது கை மேல் பலனாக தான் ரிலீசுக்கு முன்பே படம் பயங்கரமாக வசூலை வாரி குவித்து வருகிறது. படம் வெளியானால் இன்னும் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் எதிர்பார்ப்பை மீறி வசூல் செய்திருந்தது. அதேபோல் தான் இப்போது அட்லீ ஜவான் படத்தையும் செதுக்கி வைத்திருக்கும் நிலையில் கண்டிப்பாக பாலிவுட்டில் மற்ற படங்கள் செய்த சாதனையை இப்படம் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜவான் ரிலீஸ் நாட்களை ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

Also Read : நெல்சனை ஃபாலோ பண்ணும் அட்லீ.. விஜய்யால் அதிர்ந்த ஜவான் மேடை

Trending News