வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பயந்த மாதிரியே முத்தக் காட்சியுடன் வெளிவந்த ஜவான் பாடல்.. அட்லி மீது கொல காண்டில் இருக்கும் விக்கி

Jawan: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்துக்கு வேற லெவலில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் நயன்தாராவும் பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி, அனிருத் என கோலிவுட்டின் முக்கிய புள்ளிகள் இப்படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான முன்னோட்ட வீடியோ போஸ்டர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் முதல் பாடலும் வெளியாகி சக்கை போடு போட்டது.

Also read: ரிவால்வர் ரீட்டாவாக மாறிய நயன்தாரா.. மாஸாக மிரட்டும் விஜய் சேதுபதி, வெளிவந்த ஜவான் போஸ்டர்

அதைத்தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியான வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதிலும் இந்த வீடியோவை பார்த்தால் விக்னேஷ் சிவன் நிச்சயம் கதிகலங்கி போய்விடுவார். அந்த அளவுக்கு அதில் ரொமான்ஸ் பொங்கி வழிகிறது.

அந்த வகையில் ஹைய்யோடா என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் முழுக்க முழுக்க ஷாருக்கான், நயன்தாராவின் ரொமான்டிக் பக்கமாக இருக்கிறது. அதிலும் ஷாருக், நயனை அலேக்காக தூக்கி சுற்றும் ஒரு காட்சி கொஞ்சம் ஓவராக இருப்பதாகவே தோன்றுகிறது.

Also read: மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறினாலும் நயன்தாரா சமீப காலமாக இது போன்ற ரொமான்ஸ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் பாலிவுட்டில் வெற்றி கொடியை பறக்க விட வேண்டும் என்பதற்காக அவர் இப்படி உருகி உருகி ரொமான்ஸ் செய்திருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.

அந்த வகையில் விக்கி பயந்ததில் தப்பே இல்லை என்றும் இதுதான் நயன்தாராவின் புது அவதாரம் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் தற்போது வெளியாகி உள்ள இந்த பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளை விட அதிக கவனம் பெற்று இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் விக்கி, அட்லி மீது தற்போது கொல காண்டில் இருக்கிறார்.

Trending News