திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புள்ள மேல கைய வைக்கிறதுக்கு முன்னாடி அப்பன தொடு பார்க்கலாம்.. தாறுமாறான மேக்கிங், ட்ரெண்டாகும் ஜவான் ட்ரைலர்

Jawan Trailer: பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் மிகப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஜவான் படத்தின் ட்ரெய்லர் இன்று அசத்தலாக வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் 7ம் தேதி வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் நேற்று இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரும் ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறது. அதிலும் படத்தின் மேக்கிங் தாறுமாறாக இருக்கிறது.

Also read: வர வர வாய்ப்பு கம்மி ஆயிட்டே போகுது.. அடுத்த பிசினஸை தொடங்கிய நயன்தாரா

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே குட்டி கதையுடன் தொடங்குகிறது. ஒரு காட்டுல ஒரு ராஜா இருந்தானாம் நல்ல பசியில, தோத்துப்போன வெறியில, பயங்கர கோவத்துல சுத்திட்டு இருந்தானாம் என்ற வசனங்களுடன் தொடங்கும் ட்ரெய்லர் ஆர்வத்தை தூண்டுகிறது.

அதைத்தொடர்ந்து ஷாருக்கானின் ஆக்சன் அவதாரமும், விஜய் சேதுபதியின் வில்லத்தனமும் மாஸாக இருக்கிறது. அதிலும் ஷாருக்கான் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் வருவதும், புள்ள மேல கைய வைக்கிறதுக்கு முன்னாடி அப்பன தொடு பார்க்கலாம் போன்ற வசனங்களும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

Also read: ஜெயிலர் போரடிச்சு போச்சு.. அட்லி பக்கம் வண்டியை திருப்பிய ப்ளூ சட்டை

அவருக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் வயதான கெட்டப்புடன் வரும் விஜய் சேதுபதியும் அசத்தலாக இருக்கிறார். அதேபோன்று நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு என நட்சத்திர பட்டாளங்களின் கதாபாத்திரங்களும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது. இவ்வாறாக வெறித்தனமாக வெளிவந்துள்ள ஜவான் ட்ரெய்லர் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Trending News