வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

போகும் இடமெல்லாம் அந்த மாதிரி பட வாய்ப்பு கேட்கும் ஜெய்.. விஜய் சேதுபதி மாதிரி ஆசைப்பட்டா எப்படி ப்ரோ!

சினிமாவில் இருப்பவர்கள் படத்தில் நடித்து எப்படியாவது பேரும் புகழையும் அடைய வேண்டும் என்றுதான் குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அதே மாதிரி தான் ஜெய்யும் மிகப்பெரிய கனவுடன் போராடி வருகிறார். ஆனால் இவர் நேரமோ என்னமோ இவர் நடிக்கும் படங்கள் அந்த அளவிற்கு கை கொடுக்கவில்லை.

ஆனால் தற்போது இவர் நடித்து வெளிவந்திருக்கும் தீராக் காதல் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை அடுத்து சூட்டோடு சூட்டாக அடுத்த படத்திலும் கமிட் ஆகினால் தொடர்ந்து வெற்றி பெற முடியும் என்பதற்காக அடித்து நயன்தாரா படத்தில் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஒரு நிகழ்ச்சி மேடையில் தீரா காதல் இயக்குனரிடம் இதுதான் சமயம் என்று இவருக்கு இருந்த ஆசையை சொல்லிவிட்டார்.

Also read: Theera Kadhal Movie Review- ஜெய்-ஐஸ்வர்யா ராஜேஷின் தீரா திருட்டு காதல்.. எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அதாவது அஜித்தை வைத்து அடுத்து படம் எடுத்தால் எனக்கு கண்டிப்பாக வில்லன் வாய்ப்பு வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டார். அதே மாதிரி தற்போது வெங்கட் பிரபு மற்றும் விஜய் இணைய போகும் படத்தில் கண்டிப்பாக இவருக்கான வாய்ப்பை கேட்டு பெறுவார். அதே மாதிரி இவர் நினைத்தால் அந்த படத்தில் எந்தவிதமான கேரக்டரையும் வாங்கிவிடலாம்.

ஏனென்றால் ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்திருக்கிறார். அதே மாதிரி விஜய்யுடன் எப்படியாவது மறுபடியும் நடித்து விட வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறார். அதுவும் சாதாரண கேரக்டர் இல்லை வில்லனாக நடிக்கணும் என்று வெங்கட் பிரபுவுடன் கூறி இருக்கிறார்.

Also read: சேரனாக மாறிய ஜெய், எக்ஸ் லவ்வருக்காக குடும்பத்தை மறக்கும் தீராக் காதல் ட்ரெய்லர்.. சூப்பரா! சொதப்பலா?

இதனால் கண்டிப்பாக விஜய் படத்தில் இவருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி போகும் இடமெல்லாம் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக மாற வேண்டும் என்ற ஆசையில் பிடிவாதமாக இருக்கிறார். அதுவும் எல்லா நடிகருக்கும் கிடையாது பெரிய நடிகர்களின் படத்தில் மட்டும் தான்.

ஏற்கனவே சுந்தர் சி நடித்த பட்டாம்பூச்சி படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றுவிட்டார். அதனுடைய தாக்கம் தான் போல. இருந்தபோதிலும் விஜய் சேதுபதி நடிகராக இருக்கும் பொழுதே வில்லன் கேரக்டரில் நடித்ததில் இருந்து இவருடைய மார்க்கெட் கூடியதால் ஜெய்யும் அந்த மாதிரி நடித்து விஜய் சேதுபதி போல் ஆகிவிடலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ.

Also read: அஞ்சலி-ஜெய் லிவிங் டு கெதர் முறிவிற்கு இதுதான் காரணம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபலம்

Trending News