செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ராமராஜனுடன் வெளிவந்த போஸ்டர்.. கோபத்தில் ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு

நடிகை அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவர் ஜெயலலிதா. தமிழ் சினிமாவில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகமானாலும் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மீது ஈர்ப்பு வர எம்ஜிஆர் உடன் இணைந்து அரசியல் களத்தில் குதித்தார். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவிற்கு தான் அதிகப்படியான வரவேற்புகள் இருந்து வந்தன.

அதன் காரணமாக எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவிற்கு அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. பின்பு நாளடைவில் அதிமுக கட்சியின் தலைவராக மாறினார்.தொண்டர்களின் ஆதரவாலும் தேர்தலின் வாக்குகளாளும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதற்கு முன்னே பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்தார். அதனால் அரசியலில் யார் யாரை எப்படி எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். மேலும் அவருக்கு இணையாக யார் இருக்க வேண்டும் என்பது கூட அவர் தான் முடிவு செய்து வந்தார். அந்த அளவிற்கு மிகவும் கவனமாக இருந்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவை பற்றிய புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பு ஜெயலலிதாவிடம் அந்த புகைப்படம் சென்று அவருடைய அனுமதி பெற்ற பிறகுதான் பத்திரிகைகளில் வெளிவரும். ஒருமுறை ஜெயலலிதாவிற்கு இணையாக ராமராஜன் இருக்கும் புகைப்படத்தை ஜெயலலிதாவிடம் கொண்டு சென்றுள்ளனர்.

புகைப்படத்தை பார்த்து கேள்விக்குறியை மட்டும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். பின்பு பயில்வான் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பெரியதாக பதிவிட்டு ராமராஜன் புகைப்படத்தை ஜெயலிதாவின் காலுக்கு கீழ் வரும்படி பதிவிட்டு ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ஜெயலலிதா உடனே சரி என கூறியுள்ளார்.

அதன் பிறகுதான் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஒரு முறை ஜெயலலிதா மற்றும் ராமராஜனின் புகைப்படங்கள் வெளியானதாக சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி ராமராஜனிடம் கேட்டபோது அதற்கு ராமராஜன் என்னுடைய புகைப்படங்கள் வெளிவந்தால் சரி எனக் கூறியுள்ளார். மேலும் இதனை ராமராஜன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எதார்த்தமாக எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவில் உச்சத்தில் இருந்த ராமராஜன் அதன் பிறகு சினிமாவில் காணாமல் போனதற்குக் காரணம் அவர் இப்போது ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை தான் எனவும் மேலும் ராமராஜன் நளினி விவாகரத்து செய்ததால் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்காமல் போனதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News