தமிழ் சினிமாவில் தற்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை படமாக எடுத்து வருகின்றனர். அப்படி பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி உள்ளது. திரைத்துறையில் அறிமுகமான ஜெயலலிதா அதன்பிறகு முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்பு எப்படி அரசியல் வந்தார் அரசியல் எப்படி சாதித்தார் என்பதனைப் பற்றிய ஒரு படமாக எடுத்துள்ளனர்.
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தலைவி என பெயர் வைத்துள்ளனர். இப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் என படக்குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து இப்படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை.
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில்அரசியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகின. ஆனால் அதைப்பற்றியெல்லாம் படக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை. தற்போது படக்குழுவினர் திரையரங்கு செயல்பட தொடங்கிய பின் இப்படத்தை வெளியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் படம் திரையரங்குகளில் வெளியிட்ட பிறகு அதன்பிறகு இரண்டு OTT தலங்களுக்கு இப்படத்தினை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். அதாவது அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் வெளியிடவுள்ளனர். அதனால் தற்போது படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.