சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Ilaiyaraja: இப்ப தான் இவ்வளவு சர்ச்சை, ஜெயலலிதாவையே பயமுறுத்திய இளையராஜா.. என்ன நடந்துச்சு தெரியுமா.?

Ilaiyaraja: கடந்த சில நாட்களாகவே இளையராஜா பற்றிய சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே இவருடைய ராயல்டி பஞ்சாயத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதில் சன் நிறுவனத்திற்கு இவர் நோட்டீஸ் விட்ட நிலையில் நாலு பேர் நாலு விதமாக பேச தொடங்கி விட்டனர். ஆனால் சம்பந்தப்பட்ட மனிதரோ ஹாயாக வெளிநாட்டில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இளையராஜாவை பார்த்து ஜெயலலிதாவே பிரமித்துப்போன ஒரு சம்பவமும் நடந்து இருக்கிறது. அதை பற்றி தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதாவது இளையராஜா சினிமாவை ஆட்டி படைத்து கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. அப்போதைய ஒடிசா முதல்வர் தான் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஜெயலலிதாவை ஆச்சரியப்படுத்திய இசைஞானி

அந்த விழாவிற்கு ஜெயலலிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது மேடையில் மேஸ்ட்ரோ இளையராஜா என கூறினார்களாம்.

அதைக் கேட்டு ஒட்டுமொத்த கூட்டமும் ஆரவாரம் செய்து கைதட்டி ஆர்ப்பரித்திருக்கிறார்கள். இதை மேடையில் இருந்து கவனித்த ஜெயலலிதா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டு பார்த்தாராம்.

அதை அருகில் இருந்த இளையராஜாவிடமும் கூறி வியந்திருக்கிறார். இந்த தகவலை தற்போது மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இளையராஜாவுக்கு எந்த அளவுக்கு புகழ் இருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் இப்போது சர்ச்சையில் சிக்கி வந்தாலும் இசைஞானியின் இசையில் நிச்சயம் ஒரு மேஜிக் இருப்பதை மறுக்க முடியாது.

Trending News