திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தலைமறைவான ஜெயம் ரவி, மௌனம் காக்கும் குஷ்பூ.. திட்டம் போட்டு காய் நகர்த்திய ஆர்த்தி

Jayam Ravi: தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும் இதுவரை எந்த சர்ச்சையிலுமே சிக்காதவர் ஜெயம் ரவி. தான் காதலித்த பெண்ணையே கரம்பிடித்து இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவருடைய திருமண வாழ்க்கை சர்ச்சை செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

மனைவியின் உடனான விவாகரத்து அறிவிப்பு, அதற்கு அவர் மனைவி ஆர்த்தியின் பதில் என எல்லாமே புரியாத புதிராக இருக்கிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு சேனலின் அந்தணன் ஜெயம் ரவி குறித்து ஒரு புதிய தகவலை கொடுத்திருக்கிறார். அதாவது ஜெயம் ரவி தற்போது அவருடைய வீட்டிலேயே இல்லையாம்.

ஜெயம் ரவியின் போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப்பில் தான் இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை நேரடியாக பார்க்க சென்ற அவருடைய மனைவி ஆர்த்திக்குமே ஜெயம் ரவி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. எப்போதாவது வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு போய்விடுகிறாராம்.

திட்டம் போட்டு காய் நகர்த்திய ஆர்த்தி

இப்படி ஒரு சூழ்நிலையில் ரவியை வைத்து படம் எடுத்தவர்கள் பிரமோஷன்காக அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கை இதனால் தொலைந்து போய்விடுமோ என அவருடைய பெற்றோரும், சகோதரரும் ரொம்ப கவலையில் இருக்கிறார்களாம்.

மேலும் இந்த விஷயம் குறித்து பேசிய அந்தணன், ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ தலையிட்டு ஆக வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். ஏனென்றால் இவர்களின் காதல் திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு நடத்தி வைத்தது குஷ்பூ தான்.

குஷ்பூ ஆர்த்தியின் அம்மா சுஜாதாவிற்கு நெருங்கிய தோழி. ஜெயம் ரவி வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த காலகட்டத்தில் ஆர்த்திக்கு அவர் மீது ஒரு தலை காதல் இருந்திருக்கிறது. இதைப்பற்றி குடும்ப நண்பரான குஷ்புவிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

அப்போது சினிமா நட்சத்திரங்கள் சிலர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். ஜெயம் ரவி வருகிறார் என தெரிந்ததும் குஷ்பூ ஆர்த்தியையும் வர வைத்திருக்கிறார். அந்த சுற்றுலாவின் ஒரு நாளில் எல்லோரும் வெளியே கிளம்பும்போது ஜெயம் ரவி நான் வரவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

ஆர்த்தி இந்த சம்பவத்தை பயன்படுத்தி கொண்டு அவரும் ஹோட்டல் ரூமிலேயே தங்கியிருக்கிறார். அப்போது ஜெயம் ரவியிடம் தன்னுடைய காதலை பற்றி தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் ஒரு ரசிகையாக சொல்கிறார் என ஜெயம் ரவி சாதாரணமாக எடுத்துக் கொண்டாராம்.

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவரும் ஆர்த்தியை காதலிக்க தொடங்கி இருக்கிறார். பின்னர் குஷ்பூ மற்றும் ஆர்த்தியின் குடும்பம் இணைந்து ரவியின் பெற்றோரிடம் திருமணத்தைப் பற்றி பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும், ரவியின் நிர்பந்தத்தினால் இந்த திருமணம் நடந்ததாக அந்தணன் சொல்லி இருக்கிறார்.

இந்த பிரச்சனை ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி இருவரும் இணைந்து பேசினாலே சரியாகிவிடும். அதற்கு ரவி தான் இனி நேரம் ஒதுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

ஜெயம் ரவியை பழிவாங்கத் துடிக்கிறாரா ஆர்த்தி.?

Trending News