ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றதை விட விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற தான் அதிகம் அதற்கு காரணம் ஜெயம் ரவியின் அசத்தலான நடிப்பு தான். இவர் ஏற்றுக் கொள்ளாத கதாபாத்திரம் இல்லை என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு தனக்கு கிடைக்கும் கதாபாத்திரத்தை தக்க பயன்படுத்தி அதில் வெற்றி கொடுத்து வருகிறார்.
பேராண்மை, வனமகன் மற்றும் பூலோகம் போன்ற அனைத்து படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. மற்ற நடிகர்களை போல மாஸ் படங்கள் நடித்தாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் ஏற்று நடிப்பதில் தவறியதில்லை என்று தான் கூற வேண்டும்.
ஜெயம் ரவி கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் பூலோகம் படத்தில் நடித்திருந்தார் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சனரீதியாக ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பு வாங்கிக் கொடுத்தது. தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படத்தில் ஜெயம் ரவி ஈழத்தமிழர்களுக்காக நடிப்பதாகவும் அவர்களை காப்பாற்றும் ஒரு கேங்க்ஸ்டர் ஆகவும் கலக்க இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர். தற்போது தொடர்ந்து இளைய தமிழர்கள் பற்றிய படங்கள் அதிகமாக வந்து கொண்டுதானிருக்கின்றன.
சமீபத்தில் கூட சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இலங்கைத் தமிழர்களின் கதையை மையமாகக் கொண்டு தான் உருவானது இதில் ஒரு சில எதிர்ப்புகள் வந்தாலும் வெப்சீரிஸ் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. தற்போது ஜெயம் ரவி நடக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.