செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நல்லாதான போயிட்டு இருந்துச்சு.. ஜெயம் ரவியின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்ட அண்ணன்

ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படத்தில் நந்தினி, குந்தவை பழுவேட்டரையர்கள் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் தருவாயில், அருள்மொழிவர்மன் என்ற கதாபாத்திரம் தான் பொன்னியின் செல்வன் கதாபாத்திரமாகும்.

அப்படிப்பட்ட இக்கதாபாத்திரத்தை முதலில் ஜெயம்ரவி நடிக்கப்போகிறார் என்று சொன்னவுடன் பலரும் விமர்சித்தனர். ஜெயம் ரவியின் குரலும், அவரது நடிப்பும் பொன்னியின் செல்வனாக நடிப்பதற்கு தகுதியாக அமையாது எனவும் பலரும் தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாவே இத்திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

Also read: ஜெயம் ரவியின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுந்தர்.சி

2021 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெயம்ரவியின் நடிப்பில் வெளியான பூமி படம் படுதோல்வி அடைந்து, ஜெயம் ரவியின் மார்க்கெட்டையே காலி செய்தது. அப்போதுதான் மணிரத்னம் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மீண்டும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் இவரின் கேரியரில் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்பட்டது. நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை இயக்குனரும், ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா இயக்கியிருந்தார்.

Also read: கற்பனையிலேயே யூகிக்க முடியாத காம்பினேஷன்.. ஜெயம் ரவியை காப்பாற்ற போகும் மாஸ் இயக்குனர்

இந்நிலையில் இத்திரைப்படத்தில் பிளாக்பஸ்டர் வெற்றியை அடுத்து, தனி ஒருவன் 2 திரைப்படம் உருவாகும் எனவும் இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனிடையே ஜெயம் ரவிக்கு தற்போது மார்க்கெட் சூடுபிடித்து இருக்கும் தருவாயில் இந்த படத்தை எடுத்தால் ஜெயம் ரவிக்கு மேலும் மார்கெட் உயரும்.

ஆனால் ஜெயம் ரவியின் ஆசையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக, இயக்குனர் மோகன்ராஜா தணிச்சையாக செயல்பட்டதால் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கருத்து வேறுபாடு நிலவுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனிடையே தனி ஒருவன் 2 படத்தை நிப்பாட்ட போவதாகவும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Also read: ஜெயம் ரவிக்காக அண்ணன் செய்த செயல்..பல வருட ரகசியத்திற்கு கிடைத்த பதில்

Trending News