திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இறங்கிய ஜெயம் ரவி.. மார்ச் 14 வெளியாகும் படங்கள்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களும் ஒருவராக மாறி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது தான் அமரன் படம். கமல் தயாரிப்பில் உருவான இந்த படம் 500 கோடியை தாண்டி வசூல் செய்தது.

இந்த சூழலில் ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் நடிகர் ஜெயம் ரவி மோத இருக்கிறார். அதாவது அவர்களது படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறது

இந்நிலையில் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படம் ரீ ரிலீஸாக உள்ளது. சிவகார்த்திகேயன், சூரியின் நகைச்சுவையான காமெடியில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஒரே நாளில் வெளியாகும் ஜெயம் ரவி மற்றும் சிவகார்த்திகேன் படங்கள்

இப்போது சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்திற்கு போட்டியாக ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் ரீ ரிலீஸ் ஆகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நதியா மற்றும் ஜெயம் ரவி அம்மா மகனாக நடித்திருந்தனர்.

இந்த படமும் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த சூழலில் ஒரே நாளில் இந்த இரண்டு படங்களுக்கு வெளியாவதால் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் ஜெயம் ரவி சமீபகாலமாக நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

இப்போதும் அவரது வீட்டு வாசலில் இயக்குனர்கள் வரிசை கட்டி இருக்கிறார்கள். மேலும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ரீ ரிலீசுக்கு பிறகு ஜெயம் ரவிக்கு ஒரு மாஸ் என்ட்ரி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Trending News