சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

தப்ப தட்டி கேட்க தில்லு இருந்தா போதும்.. ஜெயம் ரவியின் பிரதர் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Brother Trailer: ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள பிரதர் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ் என ஏகப்பட்ட பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என வயிறு குலுங்க சிரிக்க வரைக்கும் நகைச்சுவை படங்களை கொடுத்த ராஜேஷ் மீண்டும் அதே டிராக்குடன் வந்திருக்கிறார். இதற்கு ஜெயம் ரவியும் அட்டகாசமாக பொருந்தியுள்ளார்.

படம் முழுக்க காமெடிதான் நிறைந்திருக்கிறது. சென்டிமென்ட் சீன்கள் கூட சிரிப்பூட்டும் வகையில் இருப்பதால் ட்ரைலர் தற்போது ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்திற்கு இப்போது வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

ஜெயம் ரவியின் பிரதர் ட்ரைலர் எப்படி இருக்கு.?

டிகிரி கூட முடிக்காத விளையாட்டு பிள்ளையாக இருக்கும் ஜெயம் ரவி அப்பாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் அக்கா பூமிகா வீட்டுக்கு வருகிறார். அவரால் அங்கு என்னென்ன குழப்பம் ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.

பேமிலி ஆடியன்ஸ் உட்பட அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கும் வகையில் தான் படம் இருக்கும் என இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. ஜெயம் ரவியின் துள்ளலான டான்ஸ், நடிப்பு, காமெடி என அனைத்தும் வொர்க் அவுட் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே வெளிவந்த மக்காமிசி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டது. தற்போது படத்தின் பிரமோஷன் சூடு பிடித்துள்ள நிலையில் தீபாவளி ரேசில் ஜெயம் ரவியும் கலக்குவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Trending News