வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தொடர் பிளாப்பால் 3 ஹீரோக்கள் ஒதுக்கிய கதை.. வான்டட்டாக தலையை கொடுத்த ஜெயம் ரவி

சமீபகாலமாக ஜெயம் ரவியின் படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தால் ஜெயம் ரவியின் மார்க்கெட் எகிற தொடங்கியுள்ளது. இப்போது அகமது இயக்கத்தில் இறைவன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும் சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட ஜெயம் ரவியின் ஜன கண மன படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து படங்களை கொடுத்து வந்த ஒரு இயக்குனருக்கு ஜெயம் ரவி வாண்டட்டாக வந்த வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Also Read : பல வருடமாக கிடப்பில் போட்ட படம்.. தோல்வி பயத்தால் மீண்டும் கையில் எடுத்த ஜெயம் ரவி

இயக்குனர் பாண்டிராஜ் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை எடுத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் சிறந்த இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் இடம் கதை சொல்ல முயற்சி செய்திருந்தார்.

ஆனால் அந்த கதையை சிவகார்த்திகேயன் கேட்கவே இல்லையாம். இதை அடுத்து அந்த கதையில் தானாகவே முன்வந்து விஷால் நடிப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை படத்தில் இருந்து விலகி விட்டார். வேறு வழியில்லாமல் கார்த்தி இடம் சென்றுள்ளார் பாண்டிராஜ்.

Also Read : சமீபத்தில் ஹிட் கொடுக்க திணறி வரும் 5 ஹீரோக்கள்.. கும்பலோடு கோவிந்தா போடும் ஜெயம் ரவி

ஆனால் அவருக்கு கடைக்குட்டி சிங்கம் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துள்ளதால் மீண்டும் தன் படத்தில் நடிக்க சம்மதிப்பார் என எதிர்பார்த்தார். கார்த்தியோ தனது கதை கேட்கவே நேரமில்லை என ஒதுக்கி விட்டாராம். கடைசியில் ஜெயம் ரவி நம்ம படம் பண்ணலாம் என்று பாண்டிராஜுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த கதை கிராமம் சம்பந்தப்பட்ட கதையாகவும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்க வேண்டும் என ஜெயம் ரவி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படியே பாண்டிராஜ் கதையை தயார் செய்கிறாராம். மேலும் இந்த படத்தை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி அம்மா தயாரிக்கிறார்.

Also Read : பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஜெயம் ரவியின் 32 வது படம்.. தெலுங்கு நடிகைக்கு வலை வீசிய படக்குழு

Trending News