சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஜெயம் ரவி படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ள சாய் பல்லவி.. 13 வருடத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது அண்ணன் மோகன் ஜெயம் என்ற படத்தில் ரவியை அறிமுகம் செய்து வைத்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் ரவிக்கு ஜெயம் ரவி என பெயர் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார்கள். அப்படி சினிமாவின் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வந்த ஜெயம் ரவி ஒரு கட்டத்திற்கு பிறகு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். அப்படி இவர் நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில், பூலோகம் மற்றும் வனமகன் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் கவனிக்க கூடிய ஒரு நடிகராக பிரபலமானார். இருப்பினும் மற்ற நடிகர்களை போல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முடியாமல் தற்போது வரை தவித்து வருகிறார். என்னதான் படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் மற்ற நடிகர்களின் படங்கள் வசூல் பெறுவது போல ஜெயம் ரவி படங்கள் பெரிய அளவில் வசூல் பெறுவதில்லை. இவரது திரை வாழ்க்கையில் வசூல் சாதனை படைத்த படங்கள் என்று சொல்லப்போனால் ஒரு சில படங்கள் மட்டும்தான் இடம் பெறும்.

dhaam dhoom sai pallavi
dhaam dhoom sai pallavi

ஆனால் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் அதிகமான படங்கள் இடம்பெறும். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தின் மூலம் தான் கங்கனா ரனாவத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில்தான் சாய்பல்லவி முதன்முதலாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். ரசிகர்கள் பலரும் மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம்தான் சாய் பல்லவி சினிமாவிற்கு அறிமுகமானார் என நினைத்து வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. 13 வருடங்களுக்குப் பிறகு சாய்பல்லவி நடித்துள்ள தாம்தூம் படத்தின் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News