தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் ஒழுக்கமான பையனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஜெயம் என்ற வெற்றி படத்தின் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கிய ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் அமைந்து அவரை இளம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படும் ஹீரோவாக மாற்றி விட்டது. ஆனால் அவருக்கும் இடையில் தொடர்ந்து சில சறுக்கல்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரிசையாக சில தோல்விப் படங்கள் கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் எந்த படமும் நடிக்காமல் தடுமாறினார். ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் என்ட்ரி கொடுத்த ஜெயம் ரவிக்கு தற்போது வரை வரிசையாக அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
வசூலும் ஏகபோகமாக உள்ளதால் தியேட்டர்காரர்கள் ஜெயம் ரவியை மினிமம் கேரண்டி நடிகர் என அழைத்து வருகின்றனர். இப்படி அனைத்து பக்கமும் நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ள ஜெயம் ரவி சமீபகாலமாக தன்னுடைய படங்களில் யார் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதில் அதிகம் தலையிடுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இதுபற்றி ஜெயம் ரவியிடம் கேட்டபோது, ஹீரோயின்கள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை என்றும், அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவு எடுப்பதுதான் எனவும் தெளிவாக கூறியுள்ளார். மேலும் கதையை தேர்வு செய்வது மட்டும்தான் என் வேலை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜெயம்ரவி மீது வேண்டுமென்றே தேவையில்லாமல் ஹீரோயின் சம்பந்தப்பட்ட வதந்தியை கிளப்பியுள்ளது அவருக்கு மன சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் பூமி என்ற படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.