புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜெயம் ரவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இந்த வருடம் மட்டும் இத்தனை படங்களா?

ஜெயம் ரவியின் கோமாளி படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு வருடம் எந்த படமும் வெளிவரவில்லை. அதன் பின் 2021 ஆம் ஆண்டு பூமி திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இது ஓடிடி மூலம் தான் வெளியானது. பின்பு இவருக்கு சோலோ ஹீரோவாக நடிப்பதற்கு எந்த படம் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்தப் படத்திற்குப் பிறகு இவருடைய மார்க்கெட் கொஞ்சம் கூடிவிட்டது. இதன் காரணமாக இப்பொழுது இவர் ஐந்து படங்களை கையில் வைத்து கொண்டு வரிசையில் ரிலீஸ் செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறார். இந்த வருடம் ஜெயம் ரவிக்கு அடித்த அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தவருக்கு தொக்காக கிடைத்திருக்கிறது.

Also read: அருள்மொழி வர்மாக்கு அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள்.. சோலோ ஹிட் கொடுக்க படாத பாடுபடும் ஜெயம் ரவி

அதாவது வருகிற மார்ச் 10ஆம் தேதி அகிலன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகிலன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரத்தில் கடற்படை அதிகாரியாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு ஜூன் மாதம் இறைவன், செப்டம்பர் மாதம் சைரன் மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படி தொடர்ந்து படங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறார். இது மட்டுமில்லாமல் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 முழுமையானதாக இருக்கும்.

Also read: பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்

இத்துடன் தனி ஒருவன் 2ல் கமிட் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கான தகவல் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படி ஜெயம் ரவி தொடர்ந்து பிசியாக நடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் என்றே சொல்லலாம்.

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி வந்தாலும் இந்த வருடம் மொத்தமாக ஐந்து படங்கள் ரிலீஸ்க்கு வருவதால் இவருக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சோலோ படமாக கொடுக்க முடியாத நிலைமையில் இருந்த ரவிக்கு வருகிற படங்கள் மூலம் இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கோமா ஸ்டேஜ் போன கதையை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. ஜெயம் ரவியை கோமாளியாக மாற்றிய பிரதீப்

Trending News