வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

4 படங்கள் பிளாப் கொடுத்தும் கையில் வைத்திருக்கும் 2 மெகா பட்ஜெட் மூவிஸ்.. அண்ணனுக்கு ஜே போடும் ஜெயம் ரவி

jayam ravi has 2 mega budget movies to keep in hand despite flopping 4 films: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஜெயம் ரவி காதல், காவியம், ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து விதமான படங்களுக்கும் பொருந்தும் பாவனையும், நடிப்புத் திறமையும் ஒருங்கே பெற்றவர்.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதை மாந்தராக நடித்து அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார். இதற்குப்பின் இவர் நம்பிய படங்கள் கைகொடுக்காமல் போனது இவரது துரதிஷ்டம்.

பூமி, இறைவன்,அகிலன் என தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும்  தனித்துவமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

படத்திற்கு படம்  வித்தியாசம் காட்டும் ஜெயம் ரவிக்கு சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு ஆறுதல் வெற்றியை தந்தாலும் எதிர்பார்த்த வசூலை அடைய முடியாமல் திக்கித் திணறித்தான் போனது.

முன்னணி நடிகர்கள் மல்டி ஸ்டார்ஸ் படங்களில் நடிக்க தயங்கினாலும்  துணிச்சலாக ஒப்புக்கொண்டு அதிலும் தனது நிரூபித்து எப்போதுமே ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் ஜெயம் ரவி.

தற்போது கமலுடன் தக்லைப்பில் இணைந்துள்ள ஜெயம் ரவி  இதை தன் வாழ்நாள் பெருமையாக நினைத்து சந்தோஷத்தில் பூரித்து வருகிறார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் தனி ஒருவன் 2, ஜீனி 

அது மட்டும்இன்றி  ஐசரி கணேஷின் தயாரிப்பில் 100 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பான ஜீனி  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது ஜெயம் ரவிக்கு நிச்சயம் கம்பேக்காக அமையவும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இது தவிர 2015  மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தனி ஒருவன் அடுத்த  பாகமும் 130 கோடி பிரம்மாண்ட செலவில் ஏஜிஎஸ் இன் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

அண்ணன் இருக்க பயமேன் என்பது போல் தனி ஒருவன் 2 படத்தை மலைபோல் நம்பி உள்ளார் ஜெயம் ரவி.

இவை தவிர கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை திரைப்படமும், ராஜேஷின் பிரதர் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

Trending News