செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அடிமாட்டு விலையில் சிக்கிய படங்கள்.. ஒரே படத்தில் ஜெயம் ரவியை கணித்து செய்யும் அநியாயம்

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. ஜெயம் ரவி தனி ஒருவன் திரைப்படத்திற்கு பின்பாக மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இதனிடையே ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ப்ரியா பவானி சங்கர், தான்ய ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் ஜூலை மாதம் வெளியானது.

Also Read : கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியால் ஜெயம் ரவியின் மார்க்கெட் எதிரி உள்ள நிலையிலும் அவரது திரைபடத்தை வாங்கும் திரைப்பட வினியோகஸ்தர்கள் அடிமாட்டு விலைக்கு அவரது படங்களை விலைபேசி வருவதாக அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது. அகிலன் படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வினியோகம் செய்ய உள்ள நிலையில், மிகவும் குறைந்த விலைக்கு உதயநிதி ஸ்டாலின் ஜெயம் ரவியின் படத்தை வாங்கி உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான பூமி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீஸ் ஆன நிலையில் படம் சரியாக ஓடாததால், அவரது மார்க்கெட் முற்றிலுமாக சரிந்தது. இதன் காரணமாக ஜெயம் ரவியின் அடுத்தடுத்த திரைப்படமான இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை நயன்தாரா ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.

Also Read : ஜெயம் ரவியின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுந்தர்.சி

குறைந்த விலையில் இந்த திரைப்படம் பேசப்பட்டு வருவதால் இவரின் அடுத்தடுத்த படங்களும் இதே நிலைமை தான். தற்போது ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் ரிலீசாக வேண்டும் என்றால் உதயநிதியின் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சரண்டராகி உள்ளது.

இப்படியே சென்றால் ஜெயம் ரவியின் மார்க்கெட்டும், அவரது சம்பளமும் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அவரது இந்த நிலை மாற ஒரே வழி என்றால், பொன்னியின் செல்வன் பாகம்-2 அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ள நிலையில், அத்திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ஜெயம் ரவியின் மார்க்கெட் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : உண்மையைச் போன் போட்டு சொன்ன சிம்பு.. மணிரத்னத்தை மிரட்டிய ஜெயம் ரவி, விக்ரம்

Trending News