தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் நல்ல நல்ல படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.
இவரும் ஒரு கட்டத்தில் தன்னுடைய சினிமா மார்க்கெட்டை இழந்து ஒரு மூன்று வருடங்கள் சுத்தமாக படமே செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அதற்கிடையில் ஒரு படம் உருவாகி ரிலீஸாகாமல் பைனான்ஸ் பிரச்சனையில் முடங்கியது.
எப்படியாவது ஒரு விடிவுகாலம் வந்துவிடாதா என எதிர்பார்த்தவருக்கு கைகொடுத்த திரைப்படம்தான் பூலோகம். ஜெயம் ரவி வழக்கமான தன்னுடைய படங்களின் பாணியை மாற்றி இந்த படத்தில் குத்துச் சண்டை வீரராக மிரட்டியிருந்தார்.
இந்த படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்த பிறகுதான் அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு மீண்டும் செகண்ட் இன்னிங்ஸில் தமிழ் சினிமாவில் ஆழமாக கால் பதித்தார்.
பூலோகம் என்ற வெற்றி படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஒரு அதிரடி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஜெயம் ரவி. இதற்கான பேச்சுவார்த்தைகள் கூட ஏற்கனவே முடிந்துவிட்டதாம்.
செப்டம்பர் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.