வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து ஆப்பு வச்ச ஜெயம் ரவி! கமலால் கதறும் மணிரத்தினம்..

Jayam Ravi left the maniratnam movie Thug Life: மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தனது அடுத்த படைப்பான தக் லைஃப்பில் பிசியானார் இந்த மாமேதை.

கமலுடன் பொன்னியின் செல்வனில் நடித்த திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரை இப்படத்திலும் இணைத்தார் மணிரத்தினம். இவர்களைத் தவிர துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக்  போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கூட்டணி சேர்ந்துள்ளனர். 

“மற்ற இயக்குனர்களின் படங்களில் வசனங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் மணிரத்தினம் படத்தில் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்” என்று மணிரத்தினத்தின் பெருமையை பொன்னியின் செல்வன் விழாவில் பறைசாற்றினார் ஜெயம் ரவி. 

மணிரத்தினத்துடன் பொன்னின் செல்வனில் இணைந்ததையே பாக்கியமாக கருத,மேலும் இன்ப அதிர்ச்சியாக கமலுடன் தக் லைஃப் படத்தில் இணைய இருந்தது வாழ்நாள் சாதனையாகவே கருதினார்.

கடந்த வருடம் கமலின் பிறந்தநாள் அன்று தக் லைஃப் படத்தின் அறிவிப்பு வந்ததோடு சரி, அதற்குப்பின் நாலு மாதங்கள் கடந்த பின்னும் படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காமல், கால்ஷீட் பற்றியும் பேசாமல் தொடர்ந்து தாமதித்து கொண்டே வருகின்றார் கமல்.

கமலை நம்பி முன்னணி கலைஞர்கள் பலரும் அடுத்த படங்களில் கமிட் ஆகாமல் காத்துகொண்டே இருந்தனர். ஜெயம் ரவியும் தக் லைஃப் முடித்துவிட்டு தான், தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் தனி ஒருவன் 2 நடிப்பதாக இருந்தது.

துல்கரை தொடர்ந்து விலகிய ஜெயம் ரவி 

பாராளுமன்ற தேர்தலில் பரபரப்பாக இருக்கும் கமலால் தொடர்ந்து தாமதித்துக் கொண்டே வருகிறது தக் லைஃப், படத்தின் கதை, கதாபாத்திரம், கால் சீட் என எதையுமே கூறாமல் இயக்குனர் ஹச் வினோத்தை காக்க வைத்தது போல் மாத கணக்கில் காக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கமல்.

கமல் என்பதால் மணிரத்தினமும் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் இருப்பதால், தக் லைஃப்லிருந்து துல்கர் விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகுவதாக கூறியுள்ளார்.

மணிரத்தினம் படத்தை நம்பி இரண்டு மாதங்கள் வேஸ்ட் பண்ணி விட்டாராம். அதனால் மணிரத்தினம் திரும்ப கேட்டா கூட நடிக்க மாட்டேன் என்று வெளியில் வந்து விட்டார். இப்போது இந்த கேரக்டருக்கு நடிக்க நிவின் பாலி அல்லது அரவிந்த்சாமியை அணுகுவதாக செய்தி.

ஜெயம்ரவி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜீனி படத்தின் கதையும் கமலுக்காக உருவாக்கப்பட்டதுதானாம். 3 ஆண்டுகளாக கமலை பார்த்து கதை கூற முடியாத நிலையில் ஜெயம் ரவியை ஃபிக்ஸ் பண்ணதாக கூறினார் இயக்குனர் அர்ஜுன ன்

Trending News