வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜெயம் ரவிக்கு கை கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. ஓ! இதைத்தான் காலச்சக்கரம்ன்னு சொல்றாங்களா?

Sivakarthikeyan: வாழ்க்கை ஒரு வட்டம், இங்கே ஜெயக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான் என்று சிம்பு ஒரு படத்தில் வசனம் பேசி இருப்பார். அது தற்போதைய தமிழ் சினிமாவுக்கு தான் சரியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் நடிகர் பிரஷாந்த் டாப் ஹீரோ, அப்போது விஜய் மற்றும் அஜித் வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்தார்கள்.

பிரசாந்த் கொடி கட்டி பறந்த காலத்தில், இவர்கள் இருவரின் படங்களும் மக்களால் அடையாளம் காணப்படுவதே பெரிய விஷயமாக இருந்தது. கடைசியில் தற்போது விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக இருக்கும் பொழுது அவருடைய கோட் படத்தின் மூலம் பிரஷாந்த் கம் பேக் கொடுக்க வேண்டிய நிலைமை.

ஜெயம் ரவிக்கு கை கொடுக்கும் சிவகார்த்திகேயன்

அப்படித்தான் தற்போது ஜெயம் ரவியின் சினிமா கேரியரும் ஆகியிருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு ஜெயம் ரவிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவிலான வெற்றி படங்கள் எதுவுமே இல்லை. சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீசான பிரதர் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் அதே தீபாவளியில் ரிலீசான சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சிவகார்த்திகேயன் படத்தில், ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அதுதான் நடக்கப் போகிறது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா நடிக்க இருக்கும் புறநானூறு படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பதாக இருந்தது அல்லவா.

தற்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி அந்த கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான டெஸ்ட் சூட் நடைபெற இருக்கிறது.

Trending News