ஜெயம் ரவியின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடித்த முதல் படமே அவருக்கு அடையாளமாக அமைந்தது. இவர் நடித்த படங்கள் எல்லாமே மற்ற நடிகர்களை விட தனித்துவமாக இருக்கும்.
ஜெயம்: ஜெயம் ரவி முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் ஜெயம்.இத்திரைப்படத்தில் சதா கதாநாயகியாக நடித்து இருப்பார். இப்படத்தை இயக்கியவர் ஜெயம்ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா. இப்படம் இருவருக்கும் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்தது.

எம் குமரன் S/O மகாலட்சுமி: ஜெயம் ரவி, அசின், நதியா பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார்.

சந்தோஷ் சுப்பிரமணியம்: 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் ஜெனிலியா,பிரகாஷ்ராஜ் , சந்தானம், கீதா நடித்திருப்பார். இப்படம் தந்தை மகனுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்துவது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருந்தார்.

பேராண்மை: 2009 இல் வெளியான பேராண்மை திரைப்படத்தை ஜனார்த்தன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜெயம் ரவி ரோலாண்ட் கிக்கிங்கர், வடிவேலு, ஊர்வசி, பொன்வண்ணன் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

தனி ஒருவன்: இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து இருப்பார்.வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்து இருப்பார்.

மிருதன்: 2016 இல் வெளியான இத்திரைப்படம் ஆங்கிலத் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது.இதில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பல ஹீரோக்கள் இவர் படம் வெளிவருகிறது என்றால் சற்று யோசித்து தான் களத்தில் இறங்குவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக ஜெயம்ரவியின் படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தற்போது கதை தேர்வில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறாராம்.