வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாலிவுட்டில் ஜெயம் ரவி.. அஜித் பட தயாரிப்பாளரின் பக்கா பிளான்!

பாலிவுட்டில் தடம் பதிக்க போகும் ஜெயம் ரவியின் கோமாளி படம். தயாரிப்பாளர் போனி கபூர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி வெற்றி வாகை சூடி வந்து திரைப்படம் தான் கோமாளி.

தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆவது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெயம் ரவி 16 வருடம் கோமாவில் இருந்து எழுந்து நம் அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த திரைப்படம் இப்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது.

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தனது மகன் அர்ஜுன் கபூர் கதாநாயகனாக வைத்து கோமாளி படத்தை ரீமேக் செய்ய உள்ளார்.

போனி கபூர் தற்போது தமிழில் அஜீத் நடிப்பில் வலிமை படமும் தயாராகி கொண்டிருக்கிறது. ரீ-மேக் படங்களில் அதிக முனைப்பு காட்டும் போனி கபூரின் அடுத்த படைப்பிற்கு காத்திருப்போம்

jayam ravi yogi babu comali

Trending News