ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குறுக்க எவன் வந்தாலும் சாச்சுட்டு போய்கிட்டே இருப்பேன்.. ‘நெருப்புடா’ mode-ல் ஜெயம் ரவி

ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். ஆர்த்தியை பிரிந்த பிறகு மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார் ஜெயம் ரவி. ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என அவர் தெரிவித்துவிட்டார். கெரியரை பொறுத்தவரை எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் பிரதர் படம் இந்த மாத இறுதியில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்த நிலையில் முழு மூச்சாக தனது career-இல் focus செய்ய ஆரம்பித்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் கூட, வியும், ப்ரியங்கா மோகனும் மாலை அணிந்தபடி ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆக, ரசிகர்கள் திருமண வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். பல சர்ச்சைகள் தன்னை சுற்றி இருந்தாலும், எதற்கும் அசையாமல் சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை கூட தனக்கு இல்லை என்றார் ரவி. மேலும் ஆர்த்தி மட்டும் 3, 4 வங்கி கணக்கு வைத்து செலவு செய்கிறார். ஆனால் எனக்கென்று ஒரு வங்கி கணக்கு கூட இல்லை. இதையெல்லாம் ஜெயம் ரவி சொல்ல, ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு அனுதாபம் தோன்ற ஆரம்பித்து விட்டது. குறிப்பாக இவருக்கு ஆதரவாகவும் ஆர்த்திக்கு எதிராகவும் மக்கள் திரும்பி விட்டனர்.

இந்த நிலையில், அடுத்ததாக டாடா பட இயக்குனருடன் இணைய போகிறார் ஜெயம் ரவி. கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான டாடா படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஜெயம் ரவி ஜீனி, காதலிக்க நேரமில்லை, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகுதான் டாடா இயக்குநர் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து டாடா பட இயக்குனருடன் இணைவதாக ஏற்கனவே பேச பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், “இனி எங்க அண்ணனை யாராலயும் ஸ்டாப் பண்ண முடியாது.. நெருப்பு டா mode-இல் இருக்கிறார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending News