திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விவாகரத்து கதையில் நடிக்கும் ஜெயம் ரவி.. ஒருவேளை பயோபிக்கா இருக்குமோ.!

Jayam Ravi: இப்போதுதான் ஜெயம் ரவி பற்றிய சர்ச்சை ஓய்ந்திருக்கிறது. தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை அவர் வெளியிட்டதிலிருந்து மீடியாக்கள் ஆளுக்கு ஒரு கதையை திரித்து செய்திகளை வெளியிட்டது.

ஆனால் ஜெயம் ரவி அதை திட்டவட்டமாக மறுத்ததோடு சில விளக்கங்களை கூறி முற்றுப்புள்ளியும் வைத்திருந்தார். அதே சமயம் அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து இந்த விவாகரத்து தொடர்பான அவருடைய தரப்பு நியாயத்தையும் கூறியிருந்தனர்.

இப்படி பல வாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் ஒரு அப்டேட் மூலம் டேக் ஆப் ஆகியுள்ளது. அதாவது தீபாவளி ரேஸில் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருந்த பிரதர் படமும் களமிறங்கியது.

ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் பட அப்டேட்

ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. இருப்பினும் ஜெயம் ரவி தற்போது அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து பிஸியாக இருக்கிறார். அதில் சங்கரின் உதவியாளர் அருண் சக்தி முருகன் இயக்கப் போகும் படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளார்.

அதிலும் அவர் சொன்ன கதை ஜெயம் ரவியை ரொம்பவே இம்பிரஸ் செய்து விட்டதாம். உடனே நடிக்கிறேன் என அவர் சம்மதம் சொல்லி இருக்கிறார். அப்படி என்ன கதையாக இருக்கும் என விசாரித்து பார்த்ததில் ஒரு முக்கிய தகவல் கிட்டியுள்ளது.

அதாவது அப்படம் கணவன் மனைவி இடையே நடக்கும் விவாகரத்து பற்றிய கதை அம்சமாகும். ஒரு விதத்தில் ஜெயம் ரவியின் தற்போதைய நிலையும் அதுதான். அதனாலேயே இதில் அவர் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு வேளை இது பயோபிக் படமாக கூட இருக்கலாம் என கூறி வருகின்றனர். மேலும் தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இப்படத்தில் நடிக்க அவர் சம்மதித்திருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News